அரசு ஊழியர் விடுப்பு
*ஈட்டிய விடுப்பு வரவு வைத்தல்* *நிரந்தரப்* *பணியாளர்கள்* *அரசுப் பணியில் உள்ள நிரந்தர அரசு ஊழியர் மற்றும் ஏற்பளிக்கப்பட்ட தகுதிகாண்* *பருவத்தினருக்கு அவருடைய பணிக்காலத்தில் ஒவ்வொரு சனவரி 1 மற்றும் சூலை 1 தேதிகளில் முறையே 15 நாட்கள் ஈட்டிய விடுப்பு அவர்கள் கணக்கில் சேர்க்கப்படும். ஒரு அரை ஆண்டின் இடையில் புதியதாக பணி ஏற்கின்ற நிரந்தர ஊழியருக்கு ஒரு மாதத்திற்கு 2½ நாள் என்ற அளவில் அவருடைய கணக்கில் வரவு வைக்கப்படும்.* *அரை ஆண்டின் இடையில் பணியிலிருந்து ஓய்வு பெறுகின்ற ஊழியருக்கு ஒரு மாதத்திற்கு 2½ நாள் என்ற அளவில் ஈட்டிய விடுப்பு குறைக்கப்படும். பணிக்காலத்தில் இறக்கும் ஊழியருக்கும் பணியிலிருந்து நீக்கப்படும் ஊழியருக்கும் இதே நடைமுறையின்படி ஈட்டிய விடுப்பு குறைக்கப்படும்.ஒரு அரையாண்டில் ஈட்டிய விடுப்பு கணக்கில் இருப்பு வைக்கப்பட்ட பிறகு ஒரு ஊழியர் ஊதியமில்லா விடுப்பில் செல்வாரெனில் 10 நாள் விடுப்புக்கு ஒருநாள் என்ற அளவில் ஈட்டிய விடுப்பு குறைக்கப்படும்.* *தற்காலிகப் பணியாளர்கள்* ♻♻♻♻♻♻♻♻♻♻ *தற்காலிகப் பணியாளர்களுக்கு ஒரு அரையாண்டில் அவர்கள் பணிபுரிகின...