ஒரு ரூபாயில் ஒரு உயிர்
ஒரு ரூபாயில் ஒரு உயிர் " இருபத்தி நான்கு மணி நேர மருத்துவ சேவை செய்யும் சாதனை தமிழன் காஜா மொய்தீன் ! ஒரு ரூபாயில் ஒரு உயிர் இருபத்தி நான்கு மணி நேர மருத்துவமனையை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால், தனியொரு நபராக இருபத்தி நான்கு மணி நேர மருத்துவச் சேவை புரியும் ஒருவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? இத்தனைக்கும் அவர் ஒரு டாக்டரோ, நர்ஸோ கிடையாது. பள்ளியில் வெறும் எட்டாம் வகுப்பை மட்டும் முடித்திருக்கும் அவர், அப்படியென்ன மருத்துவச் சேவை செய்துவருகிறார் ? தன் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசிக்கும் காஜா மொய்தீன், கோயம்புத்தூர் காந்திபுரம் பகுதியில் சொந்தமாக ஒரு காலணிக் கடை வைத்திருக்கிறார். மாத வருமானம் பத்தாயிரம் ரூபாயிற்குள்தான். தன் வியாபாரத்திற்கிடையே இவர் செய்துவரும் அந்த அரிய சேவை அனைவரையுமே ஆச்சர்யப்படுத்தி, நெகிழவைத்து விடும்.காஜா மொய்தீனின் கையில் எப்போதுமே இரண்டு செல்போன்கள் (9363119202, 9597693060) தயார் நிலையில் இருக்கின்றன. மாறி மாறி இரண்டிற்குமே அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.அனைத்தையும் பொறுமையாகக்கேட்டு, விவரங்க...