island of the dolls பொம்மை தீவு

பொம்மை தீவு 
 
உலகில் பல தீவுகள் அழகானவை, ரம்யமானவை ,பலது மர்மமானவை ஆனால் சில தீவுகள் கொஞ்சம் திகிலானவை உதாரணமாக பொம்மைகளின் தீவு (island of the dolls)
மெக்சிகோ சிட்டியின் தெற்கு பகுதியில் Xohimico கால்வாய்களுக்கு மத்தியில் உள்ள ஒரு குட்டி தீவு தான் (island of dolls) 
திகில் ,த்ரில் ..விரும்பிகள் சாகச விரும்பிகள் .. செல்வதற்கு ஏற்ற தீவு தான் இந்த island of doll.
இந்த தீவில் மனிதர்கள் யாரும் இல்லை மாறாக இங்கே வசிப்பது எண்ணற்ற பொம்மைகள் தான். அதுவும் anabelli படங்களில் காட்ட படுவதை போல திகில் வகை பொம்மைகள். இங்கே செல்பவர்கள் அங்குள்ள மரங்களில் செடிகளில் எங்கு பார்த்தாலும் பொம்மைகள் தொங்கி கொண்டிருப்பதை பார்க்கலாம். அங்குள்ள பொம்மைகளில் ஆவிகள் புகுந்து இருப்பதாக அங்கே சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்களால் நம்ப படுகிறது. அங்கு சென்று வந்தவர்கள் பல திகில் கதைகள் சொல்வார்கள். அங்குள்ள பொம்மைகள் தன்னை தலை நிமிர்ந்து பார்த்ததாக கண்ணை சிமிட்டியதாக இரவில் அவைகளுக்குள் அவை பேசி கொள்வதாக சொல்வார்கள். இரவில் அந்த பொம்மைகள் மிகவும் மிரட்டலாக இருக்கும் என்று சொல்லவே தேவை இல்லை. 
அந்த தீவில் அந்த பொம்மைகள் எப்படி வந்தன என்பது தான் இன்னும் திகிலான கதை.
Don Julian Santana Barrera என்பவர் தான் அந்த தீவின் பாதுகாவலர் . ஒரு முறை அங்கே ஒரு சுழலில் சிக்கி இறந்து இருந்த ஒரு அடையாளம் தெரியாத சிறுமியை கண்டெடுத்தார். அந்த கால்வாயில் அந்த சிறுமியின் பினதுடன் சேர்ந்து ஒரு பொம்மையும் மிதந்து கொண்டிருப்பதை பார்த்தார்.
அந்த பொம்மையை தூக்கி எறிய மனம் இல்லாமல் அந்த இறந்த சிறுமிக்கு மரியாதை செய்யும் விதமாக அந்த பொம்மையை ஒரு மரத்தில் கட்டி தொங்க விட்டார். அதன் பின் தான் அந்த அமானுஷ்யம் ஆரம்பமானது . 
திடீரென ஜூலியன் போக்கில் பல மாறுதல்கள் ஏற்பட்டன அவர் மேலும் பல பொம்மைகளை வாங்கி வந்து மரத்தில் கட்ட தொடங்கினார். அவரது இந்த செயல் மூலம் சிறுமியின் ஆவி திருப்தி அடைவதாக சொல்ல படுகிறது. அதன் பின் தொடர்ச்சியாக பொம்மைகளை கட்டி கொண்டே இருந்தார். அந்த பொம்மைகள் எல்லாம் அவிகளால் ஆட்கொள்ள பட்டது என்கிறார்கள் . ஜூலியன் மன நிலை பாதிக்க பட்டவர் போல் ஆனார். இயல்பு வாழ்க்கையில் இருந்து மாறி தொடர்ச்சியாக பொம்மைகளை கட்ட தொடங்கினார். இப்படி அவர் பித்து பிடித்ததை போல தொடர்ந்து 50 ஆண்டுகள் கட்டி கொண்டே இருந்தார். அந்த தீவு முழுவதும் பொம்மைகளால் தனி ஒருவனே கட்டி நிறப்பினார்.
பிறகு....
திடீரென ஒரு நாள் 2001 ஆம் ஆண்டு மர்மமான முறையில் தண்ணீரில் மூழ்கி சரியாக அந்த சிறுமி இறந்து போய் இருந்த அதே இடத்தில் இறந்து போய் இருந்தார். அவரும் அந்த தீவு ஆவிகளுடன் கலந்து விட்டதாக மக்கள் நம்புகிறார்கள்
கால போக்கில் அந்த தீவு டூரிஸ்ட் ஸ்பாட் ஆக மாறி பல டூரிஸ்ட்களை கவர்ந்தது. பத்திரிக்கை ஆர்டிக்ள் டிவி தொடர்களில் வந்தது பல டூரிஸ்ட்கள் மேலும் பல பொம்மைகள் கொண்டு வந்து காட்டினார்கள். இப்பொது வெறும் பொம்மைகள் ஆட்சி செய்யும் அமானுஷ்ய தீவாக இருக்கிறது அந்த பொம்மைகளின் தீவு.

Comments

Popular posts from this blog

Paralysis treatment by alternate medicine in Andhrapradesh Palamaner

Madras regimental centre, wellington

நிறைவான வீடு - ஒரு சீனக் கதை