வேலம்மாள் மருத்துவமனை மதுரை

வேலம்மாள் மருத்துவமனை பற்றி!!!

5 ஸ்டார் ஹோட்டல் போல காட்சி அளிக்கும்  மதுரையில் அமைந்துள்ள வேலம்மாள் மருத்துவமனை .

ஓர் உடல் பிரச்சனை காரணமாக சக வழக்கறிஞர் ஒருவரை இங்கு அழைத்து வந்தோம். உள்ளே நுழைந்த உடனே அட்மிஷன் முதல் இதற்கான சிறப்பு டாக்டர் வரை அழைத்து செல்ல ஒரு நர்ஸ் இருந்தார்.

ஒரு ஒரு பிரிவுக்கும் குறைந்தது 4 
டாக்டர்கள். முதல் தர treatment என்றால் என்ன என்று இங்கு தான் முதலில் கண்டேன்.

எனக்கு மிகவும் ஆச்சர்யம் என்னவென்றால்..

1. 
டாக்டர் பீஸ் கிடையாது.
2.
அட்மிஷன் பணம் கிடையாது .

3.
அட்மிஷன் செய்த பின்னர் வீடு செல்லும் வரை நோயாளிக்கு உணவு இலவசம். ஏனோ தானோ உணவு இல்லை மிகவும் உருசியான உணவு.

4.
ஒரு x-ray 50 ரூபாய், ஒரு Digital ECG 65 ரூபாய்,வீடியோ எண்டோஸ்கோப்பி 2000
ரூபாய்.

5.
ஆபரேஷன் கட்டணம் கிடையாது. 

நமக்கான ஒரே ஒரு செலவு இதற்கான மருந்துகளை வாங்கி கொடுப்பது தான். அதிலும் 8% தள்ளுபடி.

மிகவும் சுத்தமான மருத்துவமனை.  அருமையான கவனிப்பு. 

என் நண்பருக்கு ஒரு சிறிய அறுவை சிகிச்சை தேவை என்று சொன்னார்கள். 4 நாட்கள் இருக்க வேண்டும். Appoloவில் ஒன்றரை லட்சம். போரூர் இராமச்சந்திராவில் 84,000  மற்றொரு சிறிய மருத்துவமனையில் 45,000. ஆனால் இங்கு ஆன செலவு 13,500 மட்டுமே.அதுவும் Scan, ECG, மருந்துகள் என சகலமும் சேர்த்து.

மக்களே சென்னையில் தான் சிறந்த மருத்துவம் கிடைக்கும் என்று இல்லை. திருச்சியில் இருந்து வெறும் 2 மணி நேரம் பஸ் பயணம்.சேவை மனப்பான்மை என்று எவ்வளவோ இருந்தாலும் எனக்கு என்னவோ இது தான் சிறந்ததாக தெரிகிறது. இது மக்களுக்கான மருத்துவமனை. 

உபயாகப்படுத்தி கொள்ளுங்கள் .. share செய்து பலருக்குத் தெரியப்படுத்துங்கள். 
 
நன்றி-ஆதித்யா சுரேஷ்.

Comments

Popular posts from this blog

Paralysis treatment by alternate medicine in Andhrapradesh Palamaner

Madras regimental centre, wellington

நிறைவான வீடு - ஒரு சீனக் கதை