Posts

Showing posts with the label உணவே மருந்து

நிலக்கடலை

நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம். நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம். நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும். நீரழிவு நோயை தடுக்கும்: நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். பித்தப் பை கல்லைக் கரைக்கும்: நிலக்கடலையை தினமும் 30 கிர...

உலக நல்வாழ்வு ஆசிரமம்

திருநெல்வேலி மாவட்டம் - ஆழ்வார்குறிச்சியை அடுத்த சிவசைலம் என்கிற கிராமத்தில் உலக நல்வாழ்வு ஆசிரமம் உள்ளது. கடந்த ஆண்டு அய்யா. பழ.நெடுமாறன் அவர்கள் தனது துணைவியார் பார்வதி அம்மையாருடன் சென்று 10 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்று திரும்பியதும் தனது அனுபவத்தை தென்செய்தி இதழில் கட்டுரையாகவும் எழுதினார். இதைப் படித்த எனக்குள் ஆர்வம் அதிகரிக்க மேலும் செய்திகளை அய்யாவிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன். மேலும் மயிலாடுதுறை பேராசிரியர் த.செயராமனும் அவரது துணைவியார் சித்ரா அம்மையாருடன் சென்று சில நாட்கள் சிவசைலதில் தங்கி சிகிச்சை பெற்ற அனுபவத்தை எளிமையாக எனக்கு விளக்கினார். இதன் பிறகே கடந்த ஏப்ரல் 10 முதல் 19ம் தேதி வரை நானும், எனது மனைவி மங்கையர்க்கரசியும் சிவசைலத்தில் தங்கி சிகிச்சை பெற்றுத் திரும்பினோம். சிகிச்சை என்றால் மருந்து, மாத்திரை, ஊசி என கற்பனை செய்துகொள்ள வேண்டாம். இயற்கையான முறையிலேயே சிகிச்சை நடைபெறுகின்றன. இது குறித்து விரிவாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இக்கட்டுரையை எழுதுகிறேன். ஆசிரமத்தில் காலை 6-00 மணிக்கெல்லாம் சூடான பார்லி கஞ்சி, சுக்குமல்லி காப்பி, க...

முழங்கால் வலி

முழங்கால் வலி அதிகமாக இருக்கிறது என்றார்கள்.               பிரண்டையை உபயோகித்துகொள்ளுமாறு ஆலோசனை கூறி அனுப்பினேன்.                           கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவாரமாக வலி சுத்தமாக இல்லை என்பது மட்டுமின்றி உடல் சோர்வு அறவே இல்லை. என வந்து தெரிவித்தார்கள்.                  பிரண்டையில் உள்ள மிகையான சுண்ணாம்பு சத்து(கால்சியம்) தான்  எலும்பு மச்சையில் திரவம் அதிகமாக சுரக்க வைக்கிறது.                     அதுமட்டுமின்றி வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து பிரண்டை என போகர் நிகண்டுவில் குறிப்பிடபட்டுள்ளது....

பிரண்டை

Image
வைரம் பிரண்டை சாற்றில் பொடியாகும் என்று போகர் கூறினார். உலகிலேயே கடினமான பொருள் வைரம், அதில் உள்ள கார்பன் பிணைப்பை உடைக்கும் தன்மை இதன் சாற்றுக்கு உண்டு! #முழங்கால் வலிக்கு ஏதாவது பண்ணுங்க என்றார்கள்...... கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவாரமாக வலி சுத்தமாக இல்லை என்பது மட்டுமின்றி உடல் சோர்வு அறவே இல்லாமல் இருக்கிறது என்றார்கள்.... எங்கம்மா ஏர் உழுவும் காலங்களில் கால் வலியை போக்க பிரண்டை, மல்லிதலை, தூதுவளை, கறிவேப்பிலை சேர்த்து துவையல் செய்து தந்த ஞாபகம் அதையே இங்கு செய்தோம் ...... பிரண்டையில் உள்ள மிகையான #சுண்ணாம்பு சத்து(#கால்சியம்) தான் எலும்பு மச்சையில் திரவம் அதிகமாக சுரக்க கால்சியம் தேவை அதுமட்டுமின்றி வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து பிரண்டை என போகர் நிகண்டுவில் குறிப்பிடபட்டுள்ளது குறிப்பாக சிறுகுடலில் ஏற்படும் குறைபாடுகள் பிரண்டையால் உடனடியாக நிவர்த்தியாகும் இதை எனது அனுபவத்தில் உணர்ந்தேன் ...... பிரண்டை உப்பை சுமார் 300mg தேனில் அல்லது ...

The Lancet, Palio diet

மருத்துவ உலகை புரட்டிப் போட்ட ஒரு ஆராய்ச்சி  Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbatore நேற்று(29.8.17) ஒரு முக்கிய தினம். உலகில் பல பகுதிகளில் பல செய்தித்தாள்களில் இந்த நியூஸ் இடம் பெற்றுள்ளது.  "PURE என்ற ஒரு ஆராய்ச்சி, உணவியல் மற்றும் மருத்துவத் துறையை உலுக்கி விட்டது: அதிக கொழுப்பு சாப்பிடுதல் நல்லது" இந்தியா உட்பட 18 நாடுகளில் , ஏழு வருடங்களாக  1,35,000 பேரிடம் செய்த மிகப் பெரும் ஆராய்ச்சி இதுவாகும்.  இதில் கண்டுபிடிக்கப் பட்டது: 1. கொழுப்பு ஆபத்தில்லை: நெய், தேங்காய் எண்ணெய், முட்டை, இறைச்சி, சீஸ் போன்ற saturated கொழுப்புகள் எந்த வகையிலும் உடல் நலத்திற்கும் இதய நலத்திற்கும் தீங்கானது அல்ல  2. அதிக மாவுச்சத்து உண்பவர்களுக்கு தான் அதிகளவில் இறப்பு  வருகிறது (உதாரணம்:இட்லி, தோசை, சாதம், சப்பாத்தி, சர்க்கரை). கம்மி மாவுச்சத்து எடுப்பவர்களை விட இவர்கள் 28% அதிகம் இறக்கிறார்கள். 3. அதிக saturated கொழுப்பு சாப்பிடுபவர்களுக்கு இறப்பு எண்ணிக்கை குறைவு. கம்மி கொழுப்பு சாப்பிடுபவர்களுக்கு இறப்பு எண்ணிக்கை அதி...

இயற்கை வாழ்வியல்

இயற்கை வாழ்வியல் ஒரு வரியில் இயற்கை மருத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம்!!! 01. வரட்டு இருமலுக்கு சிறந்தது திராட்சை.! 02. முதுகுத்தண்டு வலிக்கு பாப்பாளிப்பழம் சாப்பிடு! 03. இரத்த அழுத்தம் குறைய எலுமிச்சை! 04. மூளைக்கு வலியூட்ட வல்லாரை! 05. காது மந்தம் போக்கும் தூதுவளை! 06. மூத்திரக்கடுப்பு மாற்ற பசலைக் கீரை! 07. பித்த மயக்கம் தீர புளியாரை! 08. உடற் சூடு அகல முருங்கைக் கீரை! 09. நீரிழிவு நோய்க்கு துளசி இலை! 10. இரத்தத்தை சுத்திகரிக்க வெள்ளைப்பூடு! 11. கண் பார்வை அதிகரிக்க கரட், புதினா, ஏலக்காய்! 12. கடுமையான ஜலதோசத்திற்கு தேனும் எலுமிச்சையும்! 13. வாழ்நாளை நீடிக்க நெல்லிக்கனி! 14. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வெந்தயம்! 15. கொழுப்புச் சத்தை மிளகு குறைக்கும்! 16. இளைத்த உடல் பெருக்க மிளகு! 17. பொடுகைப் போக்க தயிரில் குளி! 18. மூலநோய்க்கு கருணைக்கிழங்கு! 19. இதயப் பலவீனம் போக்க மாதுளை! 20. வெள்ளை வெட்டை தீர அன்னாசி! 21. காதுவலி தீர எலுமிச்சம் சாறு நாலு துளி காதில் விடுக! 22. பீனீசம் தலைவலி நீங்க மிளகுப் பொடியுடன் வெல்லம் சேர்த்து உண்! ...

எதிர் உணவுகளை சேர்த்து உண்ணக்கூடாது!

எதிர் உணவுகளை சேர்த்து உண்ணக்கூடாது!   உடலுக்குப் பெருங்கேடு! எல்லோரும் இதை அறிந்து  எச்சரிக்கையாய் உண்ண வேண்டும். ======= ======= ======= ======= =======  எதிர் உணவுகள் மீன் X முள்ளங்கி பசலைக்கீரை X  எள் திப்பிலி X மீன் திப்பிலி X தேன் துளசி X  பால் தேன் X  நெய் பால் X  புளிப்பான பொருள்கள் மோர் X  வாழைப்பழம் இறைச்சி X  விளக்கெண்ணெய் முள்ளங்கி X  பால் இந்த எதிர் உணவுகளை ஒன்றாகச் சேர்த்து உண்ணக் கூடாது. நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பலருக்கும் பகிருங்கள்!

மஞ்சள் காமாலை (jaundice)

மஞ்சள் காமாலை ஒரு வேளை மருந்தில் குணமான அதிசயம். *******   ******   *****  ***** நமது தமிழ்நாட்டு பாரம்பரிய மருத்துவத்தின் பெருமையை நான் அனுபவ பூர்வமாக உணர்ந்த நிகழ்வு இது. உங்களுக்கு,உங்கள் நண்பர்களுக்கோ இது அவசியம் பயன் படும். சென்ற ஆண்டு எனது மகன் பள்ளி இறுதிப் படிப்பிற்காணத் தேர்வை நெருங்கிக் கொண்டிருந்த நேரம். ஒரு நாள் கடுமையான சுரம் வந்தது. அது சாதாரண சளி சுரமாக இருக்கும் என சிகிச்சை தந்தேன். ஆனால் சுரம் விடாமல் இரண்டு நாள் நீடித்தது.தொடர் சிகிச்சை தந்ததில் சுரம் விட்டு விட்டது. ஆனால் பையன் உணவு சாப்பிடவில்லை. எதைச் சாப்பிட்டாலும் வாந்தி எடுத்தான்.தண்ணீர் குடித்தாலும் வாந்தி எடுத்தான். சந்தேகப்பட்டு கண்ணைப் பார்த்ததில் மஞ்சள் நிறம் தெரிந்தது. எனவே இரத்தம்.,சிறுநீர் பரிசோதனை செய்துவிடலாம் என அருகில் உள்ள குழந்தைகள் நல மருத்துவரிடம் அழைத்துச் சென்று காண்பித்தேன். அவர் பரிசோதனை செய்துப் பார்த்து விட்டு,மஞ்சள் காமாலை அதிகமாக உள்ளது.ஆஸ்பிட்டலில் தங்கவேண்டும்.தொடர்சிகிச்சை மேற்கொள்ளவேண்டும்.ஆறுமாதமாவது மாத்திரைகள் சாப்பிட வேண்டும்.என...

மைதாவில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் வேண்டாம்

Image
மைதாவில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் வேண்டாம் (MAIDA) ✖பிஸ்கட், பிரட், புரோட்டா, சத்து இல்லை என்பதால் அல்ல, அதில் விஷம் தான் உள்ளது.!   இதை கொடுத்தால் உங்கள் கண்முன்னே உங்கள் சந்ததிகளின் அழிவை காண்பீர்கள்.! விழித்து கொள்ளுங்கள்.! ✖ சாக்லெட் வேண்டாம்.! (CHOCHALATES) ✔ வேண்டிய அளவு கடலை மிட்டாய், எள் மிட்டாய் வாங்கி கொடுங்கள்.! ✖pizza, burgers தவிர்க்கவும்.!  (AVOID JUNK FOOD) ✔ கோதுமையை சொந்தமாக அரைத்து பயன்படுத்துங்கள்.! (WHEAT) கடையில் உள்ளதில் சப்பாத்தி உப்ப, மிருதுவாக்க (Gluten) எனும்  வேதிப் பொருள் சேர்க்கப்படுகிறது! ✔ பழங்களில்  கொய்யா, வாழைப்பழம், விதை உள்ள திராட்சை  Melons அதிகம் சேர்த்துகொள்ளுங்கள்.! ✖ corn flakes,oats வேண்டாம்.! ✔ கம்பு, தினை, ராகி, வரகு, சாமை, குதிரை வாலி  பயன்படுத்தவும்.! ✖சீனியே வேண்டாம்.! (SUGAR) ✔ தேன், வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு பயன்படுத்தவும். ✔  black tea without sugar good ✔ சுக்கு, கொத்தமல்லி காபி நல்லது. ✖யார் வீட்டிற்கு சென்றாலும் குழந்தைகளுக்கு...

முருங்கை

இயற்கை உணவும் உடல் நலனும் முருங்கையை சேர்ப்போம் முன்னூறு நோய்களை விரட்டுவோம் !! முருங்கைக்கீரை: முருங்கை முன்னூறு நோய்களை விரட்டும் என்பது கிராமத்துப் பழமொழி. நவீன மருத்துவமும் அதையே சொல்கிறது. அளவில் சிறிய குட்டிக்குட்டி முருங்கைக்கீரையில் மனித உடலுக்கு அவசியமான அத்தனை சத்துகளும் அடங்கியிருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மற்ற கீரைகள் எல்லாம் தரையில் வளரக்கூடியவை. அவை வளரும் சூழல் எப்படி இருக்குமோ என்கிற எண்ணத்தில் அந்தக் கீரைகளை பலமுறை சுத்தப்படுத்திய பிறகே சமைக்க வேண்டும்.  ஆனால், முருங்கைக்கீரை மரத்தில் வளர்வதால், அந்தப் பிரச்னை இல்லை. ஒரு மழை பெய்த உடனேயே எடுத்து ஒருமுறை அலசி, அப்படியே சமைக்கலாம். வருடத்தின் எல்லா நாட்களிலும் நமது கைக்கு எட்டிய தூரத்தில் கிடைக்கக்கூடிய முருங்கைக்கீரையை வாரத்தில் 3 நாட்கள் சேர்த்து வந்தாலே குடும்ப ஆரேக்கியம் மேம்படும். மருத்துவக் குணங்கள் முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. முருங்கைக்கீரையின் சாறு ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தைத் த...

உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா???

உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா??? தயவு செய்து வேர்க்கடலை, பேரீச்சம்பழம் தினமும் ஸ்நாக்சாக கொடுங்கள்! கீரை வாரம் 3முறை பருப்புக்கூட்டாகவும், ராகியை சேமியாவாக,கொழுக்கைட்டையாக,ரொட் டியாக வாரம் இருமுறை கொடுக்கவும்! ஆப்பிள்,ஆரஞ்சை விட பப்பாளி,கொய்யாவில் சத்துக்கள் அதிகம்! தினமும் சாப்பிடக்கொடுங்கள்! உங்கள் மனைவியின் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவரா நீங்கள்??? தயவு செய்து மண் சட்டியும்,இரும்புக்கடாயும்,மரச் செக்கு எண்ணெய்யும் வாங்கிக்கொடுக்கவும்! தினமும் 5பேரிச்சம்பழம் குறைந்த பட்சம் சாப்பிடக்கட்டாயப்படுத்துங்கள்! கருப்பு அரிசி,கருப்பு எள்,கருப்பட்டி,கருப்பு உளுந்து,மண் பானை தண்ணீர் சாப்பிட வலியுறுத்துங்கள்! உங்கள் கணவர் மீது அதிக அக்கறை கொண்ட மனைவியா நீங்கள்??? தயவு செய்து பிரிட்ஜில் வைத்த குழம்பு வகை,மாவு வகைகளை கொடுக்காதீர்கள்! ஃப்ரஷ்ஷான காய்கறிகளை,இறைச்சியை சமைக்கவும்! சீரகத்தண்ணீர்,சோம்புத்தண்ணீர் குடிக்கக்கொடுக்கவும்!

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானம்.

நண்பர்களே கவனியுங்கள்----       இது உண்மைச் சம்பவம்....    இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். தயவு செய்து கவனியுங்கள். உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள். நீங்கள் குணமடைவீர்கள்! தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார். இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார். தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில்,இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு பரிந்துரைத்தார். மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில் பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல்நாள்ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார். நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்தார். ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்க...

கேன்சர் இல்லா உலகம்

  உங்களால் நம்ப முடியாது ஒரு அதிர்ச்சியான உண்மை என்னவென்றால் புற்றுநோயை என்பது நோய் அல்ல வியாபாரம். புற்றுநோய் என்பது இன்று பரவி வரும் கொடிய நோய் மட்டுமின்றி குழந்தைகள், சிறார்கள், மற்றும் பெரியவர்கள் என அனைவரிடமும் பாரபட்சம் பார்க்காமல் பற்றிக்கொள்ளும் கொடிய நோய் ஆகும். இந்த பதிவை நீங்கள் மற்றவர்களுடன் பகிர்வதன் மூலம் இந்த மோசமான வியாபாரத்தை உலகம் முழுவதும் செய்பவர்களையும் தடுத்து நிறுத்தலாம்.  "கேன்சர் இல்லா உலகம்" - (WORLD WITHOUT CANCER) எனும் புத்தகம் உ ங்களில் எத்தனை பேருக்கு தெரியும். இன்றும் உலகம் முழுவதும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவதற்கு தடுக்கப்படுவதும், தடுக்கப்படுவதற்கு உண்டான காரணமும்  உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.  இது வரை தெரியாத ஒரு வியாபார தந்திர உண்மையை தயவுசெய்து தெரிந்து கொள்ளுங்கள்,கேன்சர் என்பது நோய் அல்ல அது வைட்டமின் B17ன் குறைபாடு. இதற்காக கீமோதெரபி, அறுவை சிகிச்சை மற்றும் பக்க விளைவுகள் தரும் மருந்தை தயவுசெய்து எடுத்துக்கொள்ள வேண்டாம். கடந்த காலத்தில் ஸ்கர்வி ( Scurvy )  எனும் ஒரு கொடிய ...

காய்கறிகளை கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்தமுடியும்

Image
12 காய்கறிகளை கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்தமுடியும்    Kidney Failure : *கத்திரிக்காய்* Paralysis : *கொத்தவரங்காய்* Insomnia : *புடலங்காய்* Hernia : *அரசாணிக்காய்* Cholesterol : *கோவைக்காய்* Asthma : *முருங்கைக்காய்*  Diabetes : *பீர்கங்காய்* Arthritis : *தேங்காய்* Thyroid : *எலுமிச்சை* High BP : *வெண்டைக்காய்* Heart Failure : *வாழைக்காய்* Cancer : *வெண்பூசணிக்காய்* உணவு பழக்கம்" பழமொழி வடிவில் * * காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.* * போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே* * பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா* * சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.* * எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல* * தன் காயம் காக்க வெங்காயம் போதும்* * வாழை வாழ வைக்கும்* * அவசர சோறு ஆபத்து* * ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்* * இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு* * ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை* * இருமலை போக்கும் வெந்தயக் கீரை* * உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி* * கல்லீரல் பலம் பெற கொய...