Posts

Showing posts with the label LAND SURVEY

நில அளவை

புதிதாக நிலம் வாங்குகிறீர்களா? அதன் பரப்பளவு, நாற்புற எல்லைகள் பற்றி அறிய வேண்டும் என்றாலும் அதன் புல வரைபடம் வேண்டு என்றாலும் அரசாங்க சர்வேயர் வந்து அளந்து ஸ்கெட்ச் போட வேண்டும். இந்த நில அளவை துறை தமிழக அரசின் ஒரு துறை. இது பற்றி சில தகவல்கள்: சர்வே பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 7 சங்கதிகள்: சர்வே இரண்டு பிரிவுகளாக மாநில அரசு பிரிக்கிறது. 1. நில அளவை துறை 2. நில வரிதிட்ட துறை புலப்படம், கிராம வரைபடம் எல்லாம் நில அளவை துறையினால் தயாரிக்கப்படுகிறது. “அ” பதிவேடு (A. Register) நில வரி திட்ட துறையினரால் உருவாக்கப்படுகிறது. மாநில அரசின் நில அள வைகளை நகர நில அளவை ,  நத்தம் நில அளவை, மலை கிராம நில அளவை, மறு நில அளவை, வட்ட அளவில் நாள்  தோறும் நடைபெறும் பட்டா மாறுதல் சம்மந்தமான நில அளவைகள் என  பிரிக்கப்படுகிறது. 1. கிராம வரைபடம், 2. D ஸ்கேட்ச் ( நன்செய், புன்செய், மானவளி, நத்தம், புறம்போக்கு பகுதிகளை பிரித்து காட்டும் வரைபடம்) 3. புலப்படம் 4.சர்வே கற்கள் பதிவேடு 5. டிப்போ பதிவேடு ( கிராமத்தில் இருக்கும் ஸ்டாக் வைக்கப்பட்ட கற்கள், நில அளவை சங்கிலி உட்பட உபகரணங்கள் இருக்கும் டிப...