Posts

அரசு ஊழியர் விடுப்பு

*ஈட்டிய விடுப்பு வரவு வைத்தல்* *நிரந்தரப்* *பணியாளர்கள்*  *அரசுப் பணியில் உள்ள நிரந்தர அரசு ஊழியர் மற்றும் ஏற்பளிக்கப்பட்ட தகுதிகாண்* *பருவத்தினருக்கு  அவருடைய பணிக்காலத்தில் ஒவ்வொரு சனவரி 1 மற்றும் சூலை 1 தேதிகளில் முறையே 15 நாட்கள் ஈட்டிய விடுப்பு அவர்கள் கணக்கில் சேர்க்கப்படும். ஒரு அரை ஆண்டின் இடையில் புதியதாக பணி ஏற்கின்ற நிரந்தர ஊழியருக்கு ஒரு மாதத்திற்கு 2½ நாள் என்ற அளவில் அவருடைய கணக்கில் வரவு வைக்கப்படும்.* *அரை ஆண்டின் இடையில் பணியிலிருந்து ஓய்வு பெறுகின்ற ஊழியருக்கு ஒரு மாதத்திற்கு 2½ நாள் என்ற அளவில் ஈட்டிய விடுப்பு குறைக்கப்படும். பணிக்காலத்தில் இறக்கும் ஊழியருக்கும் பணியிலிருந்து நீக்கப்படும் ஊழியருக்கும் இதே நடைமுறையின்படி ஈட்டிய விடுப்பு குறைக்கப்படும்.ஒரு அரையாண்டில் ஈட்டிய விடுப்பு கணக்கில் இருப்பு வைக்கப்பட்ட பிறகு ஒரு ஊழியர் ஊதியமில்லா விடுப்பில் செல்வாரெனில் 10 நாள் விடுப்புக்கு ஒருநாள் என்ற அளவில் ஈட்டிய விடுப்பு குறைக்கப்படும்.* *தற்காலிகப் பணியாளர்கள்* ♻♻♻♻♻♻♻♻♻♻ *தற்காலிகப் பணியாளர்களுக்கு ஒரு அரையாண்டில் அவர்கள் பணிபுரிகின...

சிலப்பதிகார கிராமம் - கடை சிலம்பு ஏந்தல்

கடச்சனேந்தல்...!!!   மதுரைக்கு மிக அருகில் உள்ள கிராமம் கடச்சனேந்தல். இங்கு விவசாயிகளை அமைப்பாகத் திரட்டும் ஒரு முயற்சிக்காக நான் சென்றிருந்தேன். அந்த ஊரைச் சேர்ந்த விவசாயச் சங்கத்தினர் உடன் இருந்தனர். அந்தச் சின்னஞ்சிறிய கிராமத்தின் குறுகிய வீதிகளின் வழியே, வயல் வேலைகள் முடித்துத் திரும்பும் விவசாயிகளைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தோம். சடசடவென மழை பெய்ய ஆரம்பித்தது. எங்கு ஒதுங்குவது எனச் சுற்றும்முற்றும் பார்த்து, மூலையில் இருக்கும் ஒரு தாவாரத்தில் ஒதுங்கினோம். காற்றும் மழையுமாகக் கொட்டித் தீர்த்தது. ஒதுங்கி நிற்கிறோம் என்பதற்கான எந்த அடையாளத்தையும் மழை விட்டுவைக்கவில்லை. மேலெல்லாம் நனைந்து சற்றே நடுக்கம் எடுக்கத் தொடங்கியது. நான் எதையோ யோசித்தபடி அங்கு சிறு பலகை ஒன்றில் எழுதியிருந்ததைப் பார்த்தேன். 'கவுந்தியடிகள் ஆசிரமம்’ என எழுதியிருந்தது. என் கண்களையே நம்பாமல், ஆச்சர்யத்தோடு மீண்டும் ஒருமுறை படித்து உறுதிப்படுத்தினேன். கோவலனும் கண்ணகியும் மதுரைக்கு வருவதற்கு, உறுதுணையாக இருந்து ஆற்றுப்படுத்திய சமணத் துறவி கவுந்தியடிகளுக்கு இங்கு எதற்கு ஆசிரமம் என யோச...

இதயத்தில் அடைப்பு உள்ளதா?

இதயத்தில் அடைப்பு உள்ளதா ? இதோ உடனே செல்லுங்கள் திருவனந்தபுரம் கட்டாக்கடா அருகில் உள்ள பன்னியோடு டாக்டர்.சுகுமாரன் வைத்தியர் அவர்கள் இலவசமாக வைத்தியம் செய்கிறார். நாடித் துடிப்பை பார்த்தே உங்கள் நோயை கண்டுபிடிக்கிறார். வெள்ளிக்கிழமை தவிர்த்து மற்ற எல்லா நாட்ககளிலும் வைத்தியம். இதயத்தில் அடைப்பு உள்ளவர்களுக்கு மூன்று மாத மருந்துக்கு 2700 ரூபாய் ஆறு நாட்கள் மருந்து உட்கொண்டாலே ரத்த குழாய் அடைப்பு மாறுகிறது. பணம் கொடுக்க வசதி இல்லாதவருக்கு இலவசம் . தேவையுள்ளவர் இந்த வாய்ப்பை நழுவவிடாதீர் . மிக மிக முக்கியமான தகவல் என்பதால் இதனை அதிகமான அளவில் பகிர்ந்து உங்களுடைய நண்பர்களுக்கு இத்தகைய தகவல் சென்று சேர உதவுங்கள். இதனால் யாரவது ஒருவர் பயன் பெற்றாலும் நம் அனைவருக்கும் மகிழ்ச்சியே..... Sukumaran Vaidyans G A Pharmacy & Nursing Home. Neyyattinkara P.O., Thiruvananthapuram-695572, Kerala State. Phone :0471 2222364

island of the dolls பொம்மை தீவு

பொம்மை தீவு     உலகில் பல தீவுகள் அழகானவை, ரம்யமானவை ,பலது மர்மமானவை ஆனால் சில தீவுகள் கொஞ்சம் திகிலானவை உதாரணமாக பொம்மைகளின் தீவு (island of the dolls) மெக்சிகோ சிட்டியின் தெற்கு பகுதியில் Xohimico கால்வாய்களுக்கு மத்தியில் உள்ள ஒரு குட்டி தீவு தான் (island of dolls)  திகில் ,த்ரில் ..விரும்பிகள் சாகச விரும்பிகள் .. செல்வதற்கு ஏற்ற தீவு தான் இந்த island of doll. இந்த தீவில் மனிதர்கள் யாரும் இல்லை மாறாக இங்கே வசிப்பது எண்ணற்ற பொம்மைகள் தான். அதுவும் anabelli படங்களில் காட்ட படுவதை போல திகில் வகை பொம்மைகள். இங்கே செல்பவர்கள் அங்குள்ள மரங்களில் செடிகளில் எங்கு பார்த்தாலும் பொம்மைகள் தொங்கி கொண்டிருப்பதை பார்க்கலாம். அங்குள்ள பொம்மைகளில் ஆவிகள் புகுந்து இருப்பதாக அங்கே சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்களால் நம்ப படுகிறது. அங்கு சென்று வந்தவர்கள் பல திகில் கதைகள் சொல்வார்கள். அங்குள்ள பொம்மைகள் தன்னை தலை நிமிர்ந்து பார்த்ததாக கண்ணை சிமிட்டியதாக இரவில் அவைகளுக்குள் அவை பேசி கொள்வதாக சொல்வார்கள். இரவில் அந்த பொம்மைகள் மிகவும் மிரட்டலாக இருக்கும் என்று சொல்ல...

பொதுநல வழக்கு போடுவது எப்படி?

பொதுநல வழக்கு போடுவது எப்படி? public interest litigation suite (PIL) வழக்கறிஞர் இல்லாமல், நீங்களே வழக்கு தாக்கல் செய்வது எப்படி ? பொது நல வழக்கு போடுவது எப்படி ?                                  பொதுவாக இரண்டு இடங்களில் பொது நல வழக்கு போடலாம். ஒன்று, கீழ் நீதிமன்றம். இது, மாவட்ட நீதிமன்றம் ஆகும். இரண்டு, உயர்நீதிமன்றம். இப்போது, கீழ் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு போடுவது எப்படி என்று பார்க்கலாம்.                   பொதுவாக சார்பு நீதிமன்றத்திலேயே, பொது நல வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது. பத்து நபர்கள் இணைந்து வழக்கு போடுவது நல்லது. இதற்கு முதலில், லீவ் மனு போட வேண்டும்.     இது, வழக்குடன் இணைந்தது. முதலில் சிவில் வழக்கு போட, பிராது தயாரிக்க வேண்டும். முதலில், நீதிமன்றத்தின் பெயர், அதன் கீழ், ஊர், அதன் கீழ், முதலேற்பு வழக்கு எண் என போட்டு, இடம் விட்டு, எந்த வருடம் தாக்கல் செய்கிறோமோ, அந்த வருடத்தை போட வேண்டும்.  ...

The Lancet, Palio diet

மருத்துவ உலகை புரட்டிப் போட்ட ஒரு ஆராய்ச்சி  Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbatore நேற்று(29.8.17) ஒரு முக்கிய தினம். உலகில் பல பகுதிகளில் பல செய்தித்தாள்களில் இந்த நியூஸ் இடம் பெற்றுள்ளது.  "PURE என்ற ஒரு ஆராய்ச்சி, உணவியல் மற்றும் மருத்துவத் துறையை உலுக்கி விட்டது: அதிக கொழுப்பு சாப்பிடுதல் நல்லது" இந்தியா உட்பட 18 நாடுகளில் , ஏழு வருடங்களாக  1,35,000 பேரிடம் செய்த மிகப் பெரும் ஆராய்ச்சி இதுவாகும்.  இதில் கண்டுபிடிக்கப் பட்டது: 1. கொழுப்பு ஆபத்தில்லை: நெய், தேங்காய் எண்ணெய், முட்டை, இறைச்சி, சீஸ் போன்ற saturated கொழுப்புகள் எந்த வகையிலும் உடல் நலத்திற்கும் இதய நலத்திற்கும் தீங்கானது அல்ல  2. அதிக மாவுச்சத்து உண்பவர்களுக்கு தான் அதிகளவில் இறப்பு  வருகிறது (உதாரணம்:இட்லி, தோசை, சாதம், சப்பாத்தி, சர்க்கரை). கம்மி மாவுச்சத்து எடுப்பவர்களை விட இவர்கள் 28% அதிகம் இறக்கிறார்கள். 3. அதிக saturated கொழுப்பு சாப்பிடுபவர்களுக்கு இறப்பு எண்ணிக்கை குறைவு. கம்மி கொழுப்பு சாப்பிடுபவர்களுக்கு இறப்பு எண்ணிக்கை அதி...

அரசுப் பணியாளர் வீட்டுக்கடன் திட்டம்

Image
அரசுப் பணியாளர் வீட்டுக்கடன் திட்டம் பற்றி அறியுங்கள்! பொதுவாக அரசு ஊழியர்களுக்குக் சலுகைகள் அதிகம்தான். அவற்றுள் முதன்மையானது “அரசுப் பணியாளர் வீட்டுக்கடன்” திட்டம். காரணம், மிகக் குறைந்த வட்டி வீதம்; வட்டி கணக்கிடும் முறை; இன்னும் சில சிறப்பம்சங்கள். ஒரு சில நலத்திட்டங்கள் பயனாளியை முழுமையாகச் சென்றடை யாமைக்கு இரு காரணங்கள்: 1) பயனாளி திட்டத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் திட்டம் பற்றிய சந்தேகத்துக்குத் தாமே விடையைக் கற்பித்துக்கொள்வது 2) இத்தனை பயனுள்ள திட்டம் நமக்குக் கிட்டுமா என்ற எதிர்மறை எண்ணம். அதைத் தீர்க்கவே இக்கட்டுரை.  வட்டி வீதம்: கடன் தொகையில் முதல் 50,000 ரூபாய் வரை : 5.5 % 50,001 முதல் 1,50,000 வரை : 7% 1,50,001 முதல் 5,00,000 வரை: 9% 5,00,000க்கு மேல் : 10% இது இன்றைய தேதியில் உள்ள வட்டி வீதம். இது ஒரு சதம் குறைந்ததும் உண்டு; கூடியதும் உண்டு. என்றாலும் நாம் கடன் பெறும்போது என்ன வட்டி வீதமோ அதன்படிதான் கடன் முடிவில் வட்டிக் கணக்கீடு இருக்கும். மேலும் மாத இறுதியில் நிலுவையாயுள்ள கடனுக்கு மட்டுமே தனி வட்டி. கடன் வரம்பு...