குழந்தை வளர்ப்பு மனோவியல்

பெற்றோர் குழந்தை உறவு எப்படி இருக்க வேண்டும்?

நம்மில் நிறைய பெற்றோர் குழந்தைகளுக்கு தேவையான உணவு, உடை, நல்ல பள்ளிக்கூடம்னு பாத்து பாத்து பன்னுவாங்க. ஆனா அதுக்கும் மேல குழந்தை வளர்ப்புல சில (psychological aspects) மனோரீதியான அணுகுமுறைகள் இருக்கு. குழந்தைகள் தங்களோட தேவைகளை எப்படி வெளிப்படுத்துறாங்கன்னு இந்த படங்கள் விளக்கும்.

 குழந்தைகள் முரட்டுதனமா நடந்துகிட்டாங்கன்னா அதுக்கு காரணம் பெற்றோர்தான். அப்பா, அம்மாகிட்ட இருந்துதான் அத கத்துக்கறாங்க.


நீங்க உங்க குழந்தைக்கு தேவையானத வாங்கி குடுத்த பின்னாடியும் அவன் அடுத்தவங்க பொருளை எடுக்கறான்னா அவனுக்கு வேண்டித தேர்ந்தெடுக்க நீங்க அனுமதிக்கறதில்லன்னு அர்த்தம்.


உங்க பையன்/பொண்ணு பொய் சொல்றாங்கன்னா காரணம் சின்ன சின்ன தப்புகளுகும் நீங்க ஓவர் ரியாக்ட் செஞ்சுட்டீங்கன்னு அர்த்தம்.



உங்க பையன்/பொண்ணு கோழையா இருக்காங்கன்னா அத்க்கு காரணம் சின்ன வேலையா கூட தனியா செய்ய விடாம நீங்க உதவி செய்றீங்க. அது தப்பு. let him/her try


உங்க குழந்தைக்கு சீக்கிரம் கோபம் வருதா? சின்ன விசயங்களுக்கும் அவங்கள பாராட்டுங்க, புகழுங்க . அவங்களுக்கு உங்க அட்டென்சன் தேவைப்படுது.

உங்க குழந்தை மத்தவங்கள பாத்து பொறாமைப்படுறானா? காரணம் நீங்க அவங்கள மத்த குழந்தைகளோட அதிகமா கம்பேர் பன்னி பேசுறீங்க. ஒவ்வொரு குழந்தையும் தனிதன்மை திறன் கொண்டது. எனவே ஒப்பிட்டு பேசுவதை தவிருங்கள்/குறையுங்கள்.


குழந்தைக்கு தன் மேலான சுயமதிப்பீடு குறைவுன்னா அதுக்கு காரணம் அவங்கள ஊக்கப்படுத்தறத விட அட்வைஸ் அதிகம் பன்றீங்கன்னு அர்த்தம்.

அவன் செய்யற சின்ன சின்ன தப்புகள் ஊதி பெரிசு படுத்தாதீங்க. அப்படி பன்னும்போது அவன் வெளிப்படையா இருப்பது குறைந்து எதிலும் இரகசியம் காப்பான்.


அப்பப்ப அவன அரவணைங்க, தட்டி கொடுங்க

Comments

Popular posts from this blog

Paralysis treatment by alternate medicine in Andhrapradesh Palamaner

Madras regimental centre, wellington

நிறைவான வீடு - ஒரு சீனக் கதை