டைம்பாஸ்

மனைவியை மையமாக வைத்து ஒரு காமெடி போஸ்ட். சிரிக்க மட்டும்...

புதியதாக வேதியலில் சேர்க்கப்பட்டு உள்ள ஒரு தனிமத்தின்

பெயர் : மனைவி.

குறியீடு : wf

அணு நிறை :

முதலில் பார்க்கும்போது இலகுவாக தெரியும், நாட்கள் ஆக ஆக எடை கூடிக் கொண்டே போகும்,

உடற்கூறு தன்மை :

எப்பொழுதும் அன்பில் உருகக்கூடியது, உறையக்கூடியது, தவறாக பயன்படுத்தினால் கொதிக்கக்கூடியது,

வேதியியல் தன்மைகள் :

எளிதில் எதிர்வினை புரியக்கூடியது,

அதிகமாக நிலைத்தன்மை அற்றது.

தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம், பணம், காசு, காசோலை என அனைத்தையும் ஈர்க்கும் தன்மை கொண்டது.

பணமதிப்பை குறைக்கும் வல்லமை கொண்டது.

காணும் இடங்கள் :

அழகு நிலையம், நகைக் கடைகள், பன்னாட்டு நவீன வணிக வளாகங்கள் மற்றும் ஐஸ்கிரீம் கடைகள்.

கணவனின் உறவினர்களை கண்டால் எளிதில் தீ பற்றக்கூடியது.

தனது பெற்றோர்களுடன் இருக்கும்போது இன்பம், மகிழ்ச்சி, குதூகலம், துள்ளல், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என ஒரே பன்முகத்தன்மை உடையதாக இருக்கும்.

மனப்பான்மை :

நானே இந்த பூலோகத்தின் ராணி, என்னை மிஞ்சிய அழகும், திறமையும், ஆற்றலும், அறிவும் இந்த பிரபஞ்சத்தில் இல்லை என்ற நினைப்பு.

ஆக மொத்தத்தில் புரிந்து கொள்ளவே முடியாத புதிராக இருக்கும் ஒரு தனிமம் !!😜😜😜😂😂😂

Comments

Popular posts from this blog

Paralysis treatment by alternate medicine in Andhrapradesh Palamaner

Madras regimental centre, wellington

நிறைவான வீடு - ஒரு சீனக் கதை