பெண்கள் தினம் மார்ச், 8 ஆம் நாள்
இன்று மார்ச், 8 ஆம் நாள் சர்வதேச பெண்கள் தினம். எங்கள் அலுவலகத்தில் இது குறித்து ஒரு சிறு நிகழ்ச்சி. மாலை 6.00 மணிக்கு அனைவரும் அசெம்பிள் ஆகி கேக் வெட்டி தேனீர் வழங்கினார்கள். இந்த தினத்தின் சிறப்பு குறித்து சிலர் பேசினார்கள். என்னையும் பேச அழைத்தார்கள். ஆனால் அப்போது இருந்த மனநிலையில் என்னால் பேச இயலவில்லை. ஆனால் இரவில் உறங்க செல்லும் முன்பு நான் பேசியிருந்தால் என்ன சொல்லியிருப்பேன் என்பது,
"மங்கையராக பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா
பங்கையற் கைநலம் பார்த்தலன்றி பாரினில் அறங்கள்
வளரும் அம்மா"
இது பெண்கள் குறித்து கவிமணியின் பாடல். பாரினில் அறங்கள் வளர வேண்டுமெனில் அது பெண்களால் தான் முடியும். சிந்தித்து பார்க்கும்போது அறம் என்ற வார்த்தை தமிழின் கொடையாகும். அதற்கு நிகரான ஆங்கில சொல்லையோ பிற மொழி சொல்லையோ பார்த்தல் அரிது. அறம் என்றால் என்ன? நல்ல செயல்கள் எல்லம் அறமாகும். "அறம் செய்ய விரும்பு" என்றாள் அவ்வை ஆத்திசூடியில்.
இப்படி குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் நல்ல செயல்களையே செய்யும் பெண்கள் ஒரு காலத்தில் அடக்கி ஒடுக்கப்பட்டு இழி நிலையில் இருந்தார்கள் என்றால் அது மிகையில்லை. பாரதியார் வந்தார். பெண்கள் நிலையை கண்ட அவர்,
"ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்று
எண்ணியிருந்தவர் மாய்ந்துவிட்டார்
வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைப்போம்
என்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்
பட்டங்கள் ஆழ்வதும் சட்டங்கள் செய்வதும்
பாடினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இழைப்பில்லை காண் என்று கும்மியடி"
என்று பாடினார்.
தீர்க்கதரிசியின் பாடல் இன்று உண்மையானது. பெண்கள் நாட்டின் பிரதராக, ஜனாதிபதியாக, முதலமைச்சராக சட்டகளை ஆளும் நிலை வந்தது.
மேலும் வட இந்தியாவில் ராஜாராம் மோகன்ராய், அன்னிபெசண்ட் அம்மையார், கவிக்குயில் சரோஜினி மற்றும் பலரது முயற்சியால் பெண்கள் பல்வேறு முன்னேற்றங்கள் அடைந்துள்ளனர். கொடுமையான "சதி" (எ) உடன்கட்டை ஏறுதல், குழந்தை திருமண ஒழிப்பு, விதவை மறுமண அங்கீகாரம் என படிப்படியாக... ஆனால் பெண்ணை பாதுகாக்க இன்னும் "போக்சோ" சட்டம் தேவைப்படுகிறது! இது ஆண்களுக்கு வெட்டகக்கேடு. இயல்பாக சக பெண்ணை சகோதரியாகவும், தாயாகவும் பார்க்க வேண்டியவர்களுக்கு இது போன்ற சட்டம் தேவையில்லை. நாம் இன்னும் மாக்களாகவே இருக்கிறோம் என்பதைதான் இது காட்டுகிறது.
இன்று பல்வேறு துறைகளில் கோலோச்சும் பெண்கள் நாட்டின் பாதுகாப்பு உட்பட துறைகளிலும் ஏன் போர் விமான விமானிகளாக கூட விளங்குகின்றனர்.
ஆனாலும் பெண்கலுக்
"அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு" என்ற காலம் போய்
"உலகாளும் பெண்களுக்கு அடுப்பெதற்கு" என்ற கேள்வி வந்துவிட்டது.
பெண்கள் கல்வி, பொருளாதார சுதந்திரம் அடைந்துவிட்டார்கள். மகிழ்ச்சி. ஆனால் தற்போது சராசை இந்திய குடும்பங்கள் எப்படி உள்ளது? எத்தனை கூட்டுக் குடும்பங்கள் உள்ளது? எத்தனை முதியோர் இல்லங்கள் பெருகிவிட்டது? குடும்பங்கள் பிரிவதற்கு காரணம் யார்? திருமணமானதும் தனிக்குடித்தனம் செல்ல பேச்சை ஆரம்பிப்பது யார்? என்னுடைய அனுபவம் மற்றும் கண்டு கேட்ட வற்றிலிருந்து இதற்கு பெரும்பாலும் பெண்களே காரணம். எத்தனை பெண்களால் இதை மறுக்க முடியும்? என் மனைவியே திருமணமாகி முதல் குழந்த பெற தாய் வீடு சென்றபோது, தனிகுடித்தனம் சென்றால் தான் குழந்தை பிறந்து உங்களோடு வருவேன் இல்லாவிடில் அம்மா வீட்டில் இருதுவிடுவேன் என்று கூறிவிட்டாள். பெருகிவரும் விவாகரத்துகளும், மண முறிவுகளும் நல்ல சமூகத்தின் அறிகுறியல்ல.
எனது நெருங்கிய உறவினர் மகனுகு சமீபத்தில் திருமணமானது. பையன் எம்.ஈ முடித்து ஒரு நல்ல பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளர். பெண் சாப்ட்வேர் எஞ்சினியர். திருமணம் முடிந்து இருவரும் தனிக்குடித்தனம். சில நாட்களில் பெண்ணுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு. சென்றும்விட்டார். ஒரு வருடம் கழித்து திரும்பினார். தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு. பிரிந்து விட்டார்கள். பெண்ணுக்கு குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பமில்லை என்பது கூடுதல் செய்தி! இன்னும் விஞ்ஞானம் ஆணுக்கு அந்த வசதியை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை!!
பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற்றதே இதற்கு காரணம் என்று நான் உறுதியாக சொல்லுவேன். "கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன்" என்று இருந்த காலத்தில் வேறு கதி இல்லாத பெண்கள் கணவன் என்ன தீமை செய்தாலும் சகித்துகொண்டு அவனுடன் வசித்து வந்தார்கள். தற்காலத்தில் சிறு சச்சரவு வந்தாலும் சகித்துகொள்ள முடியாமல் சம்பாத்தியம் இருப்பதால் தனியே சென்று வசிக்கவும், விவாகரத்து கேட்கவும் யத்தனிக்கிறார்கள். கிராம் அதிகாரியாக பணிபுரிவதால் பென்சன் விண்ணப்ங்களை விசாரிக்க செல்வேன். அப்போது வயதான ஆண், பெண் இருவரும் மருகள் தன்னை வீட்டை விட்டு விரட்டுவதாகவும், சாப்பாடு போடுவதில்லை எனவும் குற்றம் சாட்டுவார்கள். இங்க் பெண்ணே பெண்ணுக்கு எதிரி. தனது கணவனை வளர்த்து ஆளாக்கிய மாமனார் மாமியாருகு சோறு போடுவதில் இவர்களுக்கு முடிவதில்லை.
நான் எல்லா பெண்களையும் தவறாக சொல்லவில்லை. விதிவிலக்குகள் உள்ளன. ஆனால் இதுவே பொதுவான டிரண்ட். இது சமூகத்திற்கு நல்லதல்ல. இதுபற்றி தங்கள் கருத்துகளை பதிவிடவும். பிற்பாடு வேறு விரிவான் பதிவு இட எண்ணியுள்ளேன்.

Comments
Post a Comment