சர்க்கரை நோய் எப்படி வருகிறது?
சர்க்கரை நோய் எப்படி வருகிறது??? ஒரு யதார்த்த உண்மை செய்தி…!
சர்க்கரை நோய் சம்பந்தமான ஒரு பெரிய வரலாற்று உண்மையை உங்களுக்குச் சொல்கிறேன்.
சர்க்கரை
நோயினால் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான மக்கள் மடிந்து கொண்டிருந்த
காலகட்டத்தில், 1921-ல் கனடாவில் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக்
கொண்டிருந்த டாக்டர் ஃபிரடெரிக் பான்டிங், தன்னுடைய மாணவர் டாக்டர் பெஸ்ட்
உடன் சேர்ந்து மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவில், நாயின் கணையத்திலிருந்து
‘இன்சுலின்’ என்கிற ஹார்மோனை வெற்றிகரமாகப் பிரித்தெடுத்தார்.
இந்தச்
சாதனை, மருத்துவ உலகில் ஒரு மகத்தான புரட்சியாக அமைந்தது. பின்னர், பசு,
பன்றி ஆகியவற்றின் கணையத்தில் இருந்தும் இன்சுலின் எடுக்கப்பட்டு, தற்போது
மரபணு தொழில் நுட்பத்தில் (Genetic Engineering) உற்பத்தி செய்யப்பட்டு
உலகம் எங்கும் கோடிக்கணக்கான மக்களைக் காப்பாற்றி வருகிறது.
இந்த அரிய கண்டுபிடிப்புக்காக, 1923-ல் தன்னுடைய 32-வது வயதிலேயே நோபல் பரிசு பெற்றார் டாக்டர் பான்டிங்.
ஆனால்,
இவர் செய்த இன்னொரு மிக முக்கியமான ஆராய்ச்சியை உலகம் மறந்துவிட்டது –
அல்லது மறைக்கப்பட்டுவிட்டது என்பதுதான் வேதனையான கொடிய விஷயம்.
நூற்றுக்கணக்கான
ஏக்கரில் கரும்பு விவசாயம் செய்த பண்ணையார்கள்,ஜமீன்தார்கள் தங்கள் சொந்த
உபயோகத்துக்கு, தங்களின் சமுதாய அந்தஸ்துக்கு ஏற்ப, வெள்ளைச் சீனியையே
உபயோகித்தார்கள்.
ஆனால், இவர்களின் கரும்புத்
தோட்டத்தில் வேலை செய்த கூலித் தொழிலாளிகளோ, தங்கள் சக்திக்கு ஏற்ப
கருப்பட்டி, வெல்லம் போன்றவற்றைத்தான் சொந்தத்துக்கு உபயோகித்தார்கள்.
பண்ணையார்கள்,ஜமீன்தார்கள்
குடும்பத்தினரிடையே சர்க்கரை நோயின் தாக்கம் அதிகமாகவும்,
கூலித்தொழிலாளிகளின் குடும்பத்தினரிடையே சர்க்கரை நோயின் தாக்கம்
குறைவாகவும் இருப்பதை டாக்டர் பான்டிங் கண்டுபிடித்தார்.
இந்த
அரிய கண்டுபிடிப்பு… உலகத்தின் பார்வையில் படாமல் ஏனோ இருட்டடிப்பு
செய்யப்பட்டு, நூல் நிலையங்களுக்குள் வரலாற்றுச் சுவடிகளில் புதைக்கப்பட்டு
விட்டது.
பான்டிங்கின் இன்சுலின் கண்டுபிடிப்புக்குக் கொடுக்கப்பட்ட அதே முக்கியத்துவம், ‘வெள்ளைச் சீனியால் சர்க்கரைநோய் அதிகம் வரும்.
ஆனால்…
கருப்பட்டி, வெல்லம் போன்றவற்றைச் சாப்பிட்டால் பாதிப்பில்லை’ என்கிற
அவரின் அரிய கண்டுபிடிப்புக்கும் கொடுக்கப்பட்டிருந்தால், இத்தனை கோடி
பேருக்கு சர்க்கரை நோயே வந்திருக்காது என்று எனக்குத் தோன்றுகிறது!.
காரணம்,
சர்க்கரை நோய் பணக்காரர்களின் நோயாகவே இதுவரை கருதப்பட்டது. தற்போது அந்த
நிலை மாறி சாமானியர்களுக்கும் அந்நோய் வருவதைக் காண்கிறோம்.
சாமான்யர்களும்
கருப்பட்டிக்குப் பதிலாக வெள்ளைச் சீனியையே உபயோகப்படுத்த ஆரம்பித்ததன்
விளைவுதான் இது என்பதைத்தானே பான்டிங் அப்போதே தன் ஆராய்ச்சியில்
கூறினார்!?.
இனி, இன்றைய ஆராய்ச்சிக்கு வருவோம்.
அமெரிக்காவில்,
கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில், குழந்தைகள் அகச் சுரப்பியல் (Pediatric
Endocrinology) நிபுணராகப் பணியாற்றும் டாக்டர் ராபர்ட் லஸ்டிக் என்பவர்,
சமீபத்தில் ஓர் ஆராய்ச்சியை மேற்கொண்டார்.
ஸ்டான்ஃபோர்டு
பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் நம் ஊர் டாக்டர் சஞ்சய் பாசுவும் இந்த
ஆராய்ச்சி யில் இணைந்து பணியாற்றினார். 2000 – 2010 ஆண்டுகள் வரை, 175
நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆராய்ச்சியில், ஒவ்வொரு நாட்டிலும்
உற்பத்தியாகும்,
இறக்குமதியாகும்,விற்பனையாகும்
சர்க்கரையின் அளவுக்கும், சர்க்கரை நோய்த் தாக்கத்துக்கும் உள்ள
தொடர்புதான் இந்த ஆராய்ச்சியின் கருப்பொருள்.
ஒவ்வொரு
150 கலோரி சர்க்கரைக்கும் (அதாவது 9 ஸ்பூன் சர்க்கரை அல்லது ஒரு கோகோ
கோலா,பெப்ஸி பாட்டிலில் உள்ள சர்க்கரை) சர்க்கரை நோயின் தாக்கம் 1
சதவிகிதம் அதிகரிக்கிறது.
அதேசமயம், மற்ற வகை
உணவுகளிலிருந்து கிடைக்கும் ஒவ்வொரு 150 கலோரிக்கும் சர்க்கரை நோயின்
தாக்கம் வெறும் 0.1 சதவிகிதம்தான் கூடுகிறது.
இந்தக் கண்டுபிடிப்புகளை ‘நியூயார்க் டைம்ஸ்’ போன்ற பிரபல பத்திரிகைகள் பிரசுரித்தன.
ஹார்வர்டு
பல்கலைக்கழகத்தின் டாக்டர் வால்டர் வில்லட், யேல் பல்கலைக்கழகத்தின்
டாக்டர் டேவின் காட்ஸ் ஆகியோரும் இவருடைய கருத்துக்களை ஆதரித்தனர்.
ஆனால்,
எதிர்பார்த்தபடியே மேலை நாட்டின் சக்தி வாய்ந்த சர்க்கரை ஆலை
அதிபர்கள்,கோகோ கோலா,பெப்ஸி, சாக்லேட் நிறுவனங்கள் இந்தக் கருத்தை கடுமையாக
எதிர்த்தார்கள்.
இவர்களின் ராட்சத பண பலத்துக்கு முன்பாக அமெரிக்க சர்க்கரை நோய்க் கழகமும், பிரிட்டிஷ் சர்க்கரை நோய்க் கழகமும் அடிபணிந்தன.
இன்றைய
நவீன மருத்துவத்தை ஆங்கிலேயர்களிடமிருந்து கற்றுக் கொண்ட நாமும்,
ஆங்கிலேயர்களின் கருத்தையே வேதவாக்காக எடுத்துக் கொண்டு, சர்க்கரையின்
பல்வேறு கேடுகளையும் உணராமலும், கண்டு கொள்ளாமலும் மூடி மறைக்கிறோம்
என்பதுதான் சத்திய உண்மை.
ஆனால், டாக்டர் ராபர்ட் லஸ்டிக் இதோடு விடவில்லை.
அவருடைய
ஆராய்ச்சியில் கலந்துகொண்ட 175 நாடுகளில், 4 நாடுகள் சுதாரித்துக்கொண்டன.
தென்கொரியா, பங்களாதேஷ், அல்பேனியா, நைஜீரியா அகிய அந்த 4 நாடுகளும்
சர்க்கரை இறக்குமதியை,இருப்பை வெகுவாகக் குறைத்தன.
விளைவு
உடனே தெரிய ஆரம்பித்தது. இந்த 4 நாடுகளிலும் புதிய சர்க்கரை நோயாளிகளின்
எண்ணிக்கை வெகுவாகக் குறைய ஆரம்பித்தது என்கிற உண்மையை, டாக்டர் சுட்டிக்
காட்டுகிறார்.
இதுவரை அவர் சொன்னது எல்லாம்,
காதுகேளாதவர்களின் காதில் ஊதிய சங்கு என்று இருந்த நிலையில், சிலருக்கு
மட்டும் இந்த அபாயச் சங்கு ஒலி மிகவும் தெளிவாகக் கேட்டது.
ஆம்…
அமெரிக்க இதயநோய்க் கழகம் (American Heart Association) இவருடைய
கண்டுபிடிப்புகளை முழுமனதோடு ஏற்றுக் கொண்டது. அதோடு நின்று விடாமல்
அமெரிக்க மக்களுக்கு ஓர் பரிந்துரையும் வெளியிட்டது.
‘ஆண்கள் 9 ஸ்பூன் சீனியும், பெண்கள் 6 ஸ்பூன் சீனியும் மட்டுமே தினமும் உணவில் சேர்க்க வேண்டும்’ என்பதே அது.
அதென்ன
ஆணுக்கும் பெண்ணுக்கும் அப்படி ஒரு வித்தியாசம்? சர்க்கரையால் ஏற்படும்
உடல் பருமன் நோயின் தாக்கம் ஆண்களைவிடப் பெண்களுக்குத்தான் அதிகம் என்பதே
காரணம்.
உலக சுகாதார மையமும் (WHO -World Health Organization) சற்று விழித்துக் கொண்டது.
உணவில் சுத்த சர்க்கரையின் அளவு 10 சதவிகிதத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டை அது எடுத்தது.
‘6, 9 ஸ்பூன் சீனிதானே? அது ஒன்றும் பெரிய விஷயமில்லை.
நம்
ஊரில் காபி, டீயில் 2 ஸ்பூன் சர்க்கரை வீதம் 2 – 3 வேளை எடுத்தாலும் இந்த
உச்சவரம்பைத் தாண்டாது. அதனால், சீனியினால் நேரடி பாதிப்பு நம் ஊர்
மக்களுக்குக் கிடையாது’ என்று பிரபல சர்க்கரைநோய் நிபுணர்களே இப்போதும்
கூறிவருகிறார்கள்.
ஆனால், இந்த விஷயத்தில் எல்லோரும்
கவனிக்கத் தவறும் உண்மை என்னவென்றால் – சர்க்கரை மாறு வேஷத்தில் பல
உணவுகளில் ஒளிந்திருக்கிறது Hidden Sugar என்பதுதான்.
கோலா,பெப்ஸி
பானங்கள், சாக்லேட்டுகள், பீட்ஸா, பர்கர் போன்ற துரித உணவுகள், ஜாம்,
ஐஸ்கிரீம், பேக்கரி பதார்த்தங்கள் இன்னும் இத்யாதி இத்யாதி… எல்லாவற்றிலும்
ஒளிந்திருப்பது சீனிதானே? இவற்றை அன்றாடம் உண்ணும் இன்றைய செல்ல
குழந்தைகளும், இளைய தலைமுறையினரும் உடல் பருமன் நோய்க்கும், மெட்டபாலிக்
சிண்ட்ரோம் நோய்க்கும் ஆளாவதில் என்ன ஆச்சர்யம்?!.
சிங்கப்பூர்
அரசாங்கம் 1991-ல் ஓர் அதிரடிச் சட்டம் இயற்றியது. பள்ளிகள், இளைஞர்கள்
விடுதிகள் போன்ற இடங்களைச் சுற்றி கோக்,கோலா பானங்களும், மேலே குறிப்பிட்ட
மற்ற இனிப்பு பதார்த்தங்களும் விற்பனை செய்வதை தடை செய்தது அந்தச் சட்டம்.
அமெரிக்காவில், நியூயார்க், கலிஃபோர்னியா மற்றும் பல மாகாணங்களில் இதே மாதிரிச் சட்டம் சென்ற ஆண்டு முதல் அமலுக்கு வந்தது.
நம் மத்திய அரசும் சென்ற மாதம் தன் பங்குக்கு ஓர் ஏனோதானோ அறிவிப்பு வெளியிட்டது
Comments
Post a Comment