Posts

தர்மம் தலை காக்கும்

ஒரு சின்ன கதை இரண்டு நிமிடம் ஒதுக்கி படியுங்கள் நண்பர்களே  ரெண்டு இட்லி!! இரக்க குண பெண்மணி ஒருத்தி தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் சுவர் மேல் வைப்பாள்... அவ்வழி திரியும் ஒரு கூனல் முதுகு கிழவன் அதை எடுத்துக் கொண்டு, ஏதோ முனகிக் கொண்டே போவான். இது அன்றாட வழக்கமாயிற்று!. ஒரு நாள் மதில் அருகிலேயே நின்று, கிழவன் என்ன முனகுகிறான் என்று செவிமடுத்து கேட்டாள். அவன் முனகியது, இதுதான்: " நீ செஞ்ச பாவம் ஒங்கிட்டேயே இருக்கும்; நீ செஞ்ச புண்ணியம் ஒன்னிடமே திரும்பும்." தினந்தோறும் இதையே சொல்லிக் கொண்டு போனான். 'தினமும் இட்லி வைக்கிறேன்; எடுத்துட்டு போறான்; "நீ மவராசி நல்லா இருக்கணும் " ன்னு கையெடுத்துக் கும்பிட்டு கை, கால்ல விழல்லைனாலும், "இட்லி நல்லா இருக்கு "ன்னு பாராட்டல்லனாலும்; " ரொம்ப நன்றி தாயே" ன்னு சொல்லக் கூடவாத் தோணல ; ஏதோ,... "செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும்; செஞ்ச புண்ணியம் ஓனக்கே திரும்பும்" ன்னு தினம் தினம் உளறிட்டுப் போறானே...

247 shiva temples

நண்பர்களே ! 274 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளேன். காலம் முழுவதும் பாதுகாக்க வேண்டிய டைரி இது. எண் - கோயில் - இருப்பிடம் - போன் சென்னை மாவட்டம் 01. திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் - பாடி - 044 - 2654 0706. 02. மாசிலாமணீஸ்வரர் - வடதிருமுல்லைவாயில். சென்னையிலிருந்து 26 கி.மீ., - 044 - 2637 6151. 03. கபாலீஸ்வரர் - மயிலாப்பூர் - 044 - 2464 1670. 04. மருந்தீஸ்வரர் - திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலை - 044 - 2441 0477. காஞ்சிபுரம் மாவட்டம் 05. ஏகாம்பரநாதர் - காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ., - 044 - 2722 2084. 06. திருமேற்றளீஸ்வரர் - காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ., - 98653 55572, 99945 85006. 07. ஓணகாந்தேஸ்வரர் - ஓணகாந்தன்தளி. காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., தூரத்திலுள்ள பஞ்சுப்பேட்டை - 98944 43108. 08. கச்சி அனேகதங்காவதேஸ்வரர் - காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2கி.மீ., - 044-2722 2084. 09. சத்யநாதர் - காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., - 044 - 2723 2327, 2722 1664. 10. திருமாகறலீஸ்வரர் - திருமா...

நோய்கள் உருவாகும் இடங்கள் !

நோய்கள் உருவாகும் இடங்கள் ! ------------------------------ ------------- நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ, நீரோ, காற்றோ கிடையாது. இதோ 1 - இரசாயன வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருட்கள் 2 - டீ 3 - காபி 4 - வெள்ளை சர்க்கரை 5 - வெள்ளை சர்க்கரையில் செய்த இனிப்பு. 6 - பாக்கெட் பால். 7 - பாக்கெட் தயிர் 8 - பாட்டில் நெய் 9 - சீமை மாட்டு பால் 10 - சீமை மாட்டு பால் பொருட்கள். 11 - பொடி உப்பு 12 - ஐயோடின் உப்பு 13 - அனைத்து ரீபையின்டு ஆயில் 14 - பிராய்லர் கோழி 15 - பிராய்லர் கோழி முட்டை 16 - பட்டை தீட்டிய அரிசி 17 - குக்கர் சோறு 18 - பில்டர் தண்ணீர் 19 - கொதிக்க வைத்த தண்ணீர் 20 - மினரல் வாட்டர் 21 - RO தண்ணீர் 22 - சமையலுக்கு அலுமினிய பாத்திரங்கள் 23 - Non Stick பாத்திரங்கள் 24 - மைக்ரோ ஓவன் அடுப்பு 25 - மின் அடுப்பு 26 - சத்துபானம் என்னும் சாக்கடைகள் 27 - சோப்பு 28 - ஷாம்பு 29 - பற்பசை 30 - Foam படுக்கை மற்றும் இருக்கை 31 - குளிர்பானங்கள் 32 - ஜஸ் கீரீம்கள் 33 - அனைத்து மைதா பொருட்கள் 34 - பேக்கரி பொருட்கள் 35 - ச...

உலக நல்வாழ்வு ஆசிரமம்

திருநெல்வேலி மாவட்டம் - ஆழ்வார்குறிச்சியை அடுத்த சிவசைலம் என்கிற கிராமத்தில் உலக நல்வாழ்வு ஆசிரமம் உள்ளது. கடந்த ஆண்டு அய்யா. பழ.நெடுமாறன் அவர்கள் தனது துணைவியார் பார்வதி அம்மையாருடன் சென்று 10 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்று திரும்பியதும் தனது அனுபவத்தை தென்செய்தி இதழில் கட்டுரையாகவும் எழுதினார். இதைப் படித்த எனக்குள் ஆர்வம் அதிகரிக்க மேலும் செய்திகளை அய்யாவிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன். மேலும் மயிலாடுதுறை பேராசிரியர் த.செயராமனும் அவரது துணைவியார் சித்ரா அம்மையாருடன் சென்று சில நாட்கள் சிவசைலதில் தங்கி சிகிச்சை பெற்ற அனுபவத்தை எளிமையாக எனக்கு விளக்கினார். இதன் பிறகே கடந்த ஏப்ரல் 10 முதல் 19ம் தேதி வரை நானும், எனது மனைவி மங்கையர்க்கரசியும் சிவசைலத்தில் தங்கி சிகிச்சை பெற்றுத் திரும்பினோம். சிகிச்சை என்றால் மருந்து, மாத்திரை, ஊசி என கற்பனை செய்துகொள்ள வேண்டாம். இயற்கையான முறையிலேயே சிகிச்சை நடைபெறுகின்றன. இது குறித்து விரிவாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இக்கட்டுரையை எழுதுகிறேன். ஆசிரமத்தில் காலை 6-00 மணிக்கெல்லாம் சூடான பார்லி கஞ்சி, சுக்குமல்லி காப்பி, க...

முழங்கால் வலி

முழங்கால் வலி அதிகமாக இருக்கிறது என்றார்கள்.               பிரண்டையை உபயோகித்துகொள்ளுமாறு ஆலோசனை கூறி அனுப்பினேன்.                           கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவாரமாக வலி சுத்தமாக இல்லை என்பது மட்டுமின்றி உடல் சோர்வு அறவே இல்லை. என வந்து தெரிவித்தார்கள்.                  பிரண்டையில் உள்ள மிகையான சுண்ணாம்பு சத்து(கால்சியம்) தான்  எலும்பு மச்சையில் திரவம் அதிகமாக சுரக்க வைக்கிறது.                     அதுமட்டுமின்றி வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து பிரண்டை என போகர் நிகண்டுவில் குறிப்பிடபட்டுள்ளது....

பிரண்டை

Image
வைரம் பிரண்டை சாற்றில் பொடியாகும் என்று போகர் கூறினார். உலகிலேயே கடினமான பொருள் வைரம், அதில் உள்ள கார்பன் பிணைப்பை உடைக்கும் தன்மை இதன் சாற்றுக்கு உண்டு! #முழங்கால் வலிக்கு ஏதாவது பண்ணுங்க என்றார்கள்...... கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவாரமாக வலி சுத்தமாக இல்லை என்பது மட்டுமின்றி உடல் சோர்வு அறவே இல்லாமல் இருக்கிறது என்றார்கள்.... எங்கம்மா ஏர் உழுவும் காலங்களில் கால் வலியை போக்க பிரண்டை, மல்லிதலை, தூதுவளை, கறிவேப்பிலை சேர்த்து துவையல் செய்து தந்த ஞாபகம் அதையே இங்கு செய்தோம் ...... பிரண்டையில் உள்ள மிகையான #சுண்ணாம்பு சத்து(#கால்சியம்) தான் எலும்பு மச்சையில் திரவம் அதிகமாக சுரக்க கால்சியம் தேவை அதுமட்டுமின்றி வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து பிரண்டை என போகர் நிகண்டுவில் குறிப்பிடபட்டுள்ளது குறிப்பாக சிறுகுடலில் ஏற்படும் குறைபாடுகள் பிரண்டையால் உடனடியாக நிவர்த்தியாகும் இதை எனது அனுபவத்தில் உணர்ந்தேன் ...... பிரண்டை உப்பை சுமார் 300mg தேனில் அல்லது ...

சிவராத்திரி ரகசியங்கள்

சிவராத்திரி ரகசியங்கள்   *(புராதன சித்த நூல்களில் அகத்தியர் பெருமானால்  சொல்லப்பட்ட சிவராத்திரி பற்றிய அபூர்வ ரகசிய குறிப்புகள். )* பல இரவுகளிலும் செய்கின்ற பூஜையின் பலனை சிவராத்திரி பூஜை ஒன்றே கொடுத்துவிடும். ஏனென்றால்,பல சதுர்யுகங்கள் முடிந்து,பல கல்பங்கள் முடிந்து,இதில் வரும் இரவுகள் அனைத்திலும் அன்னை பராசக்தி ஈசனை பூஜை செய்திருக்கிறாள்;ஆகவே,சிவராத் திரி என்பது பல கல்பகோடி இரவுகள் சேர்ந்து வந்த ராத்திரி. ஆலமரத்தடியில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி யோகத்தில் அமர்ந்திருப்பதற்குக் காரணமே சிவராத்திரி மகிமையை எடுத்துச் சொல்வதற்காகத்தான்; திங்கட்கிழமையன்று சதுர்த்தசி திதி பகலும்,இரவும் 60 நாழிகைகள் சேர்ந்து வந்தால்,அது *யோக சிவராத்திரி* ஆகும்;அதாவது,யோகியர் மறந்திடாத சிவராத்திரி ஆகும்; தை மாதத்தில் வரும் தேய்பிறை சிவராத்திரியே *பட்ச சிவராத்திரி* ஆகும்; ஒரு (தமிழ்)வருடத்திற்கு 12 மாதங்கள்! ஒரு மாதத்திற்கு இரண்டு சிவராத்திரிகள்! ஆக ஆண்டிற்கு 24 சிவராத்திரிகள்! அவை வளர்பிறை சதுர்த்தசி,தேய்பிறை சதுர்த்தசி ஆகும்;இது *நித்திய சிவராத்திரி* ஆகும்; மாசிமாதத்தில...