Posts

Showing posts from November, 2019

கோவில் பொருளாதாரம்

ஹிந்துக்கள் ஏன், கோயில் கோயில் என்று அதை சுற்றியே வருகிறோம் ??? கோயில் பிராமணர்களுக்கு மட்டும் தட்டு காசு கிடைக்க வழி செய்யும் வியாபார ஸ்தலமா ??? பாரத்தை ஆண்ட பெரும்பாலான அரசர்கள் அவரவர் ஆண்ட பொழுது ஏன் மருத்துவமனை கட்டவில்லை, கல்விசாலை அமைக்கவில்லை ஆனால் கோயில்களை காட்டினார்கள் ??? கோயில்கள் எப்பொழுதெல்லாம் கட்டப்பட்டன ???? மக்களுக்கு பிரித்து கொடுக்காமல், அரசன், அரசின் நிலங்களை, ஏன் கோயில்களுக்கு மானியமாக எழுதி வைத்தான் ???? உலகின் குருவாக பாரதம் ஆனது எப்படி ??? எந்த ஒரு அரசும் பட்ஜட் போடும் பொழுது வரி வசூல் என்ன, அதில் அரசு நடத்த அதிகாரிகளுக்கு ஆகும் செலவு, மக்கள் நல திட்டங்களுக்கு ஆகும் செலவு ன்னு வரவு செலவை வைத்து தன்னிறைவு திட்டத்தை அடையத்தான் பட்ஜட் போடுவார்கள். இதையேதான் ஹிந்து கோயில்கள் செய்தன. கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் ன்னு அதைத்தான் சொல்லி வெச்சாங்க. மன்னன் கோயில் கட்ட ஆரம்பித்தவுடன், கட்டுமான பணிக்கு அந்த ஊரை சுற்றி உள்ள கட்டுமான கலைஞர்கள், சிற்ப கலைஞர்கள், கல் தச்சர்கள், கட்டுமான பொருட்களான செங்கல், சுண்ணாம்பு போன்றவற்றை உற்பத்தி செய்வோர், அதை ஓரிடத்தில் இரு...

ஐஐடியைக் குறிவையுங்கள்..' 08-10-2019

இந்தியா முழுவதும் பல ஐஐடியும், பல்வேறு மத்தியப் பல்கலைகழகங்களும் இயங்கி வருகின்றன. அதில் பெரும்பாலும் வட இந்தியர்களே பயில்கின்றனர். இதன் விளைவாக, இந்தியாவின் உயர் பொறுப்புகளில் அவர்கள் எளிதாக நுழைந்துவிடுகின்றனர். பெல், நெய்வேலி பழுப்பு நிலக்கரி மற்றும் மின் உற்பத்தி நிலையம், கல்பாக்கம், கூடங்குளம், சேலம் இருப்பாலை என்று எல்லா மத்திய நிறுவனங்களிலும் அவர்கள்தான் உயர் பொறுப்பில் அமர்ந்துள்ளனர். இந்த நிலையை மாற்ற வேண்டும்.  வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் நிதானமாகத் திட்டமிட்டு படித்து, அவற்றுக்கான நுழைவுத் தேர்வுகளை எழுதி, ஐஐடி, ஐஐஏஸி, மத்தியப் பல்கலைக்கழகங்களில் உள்ள எல்லா இடங்களையும் கைப்பற்றுகின்றனர். இந்த விடயத்தில் அவர்கள் அவசரப்படுவதே இல்லை. 'முந்துகின்ற கல் அடிக் கல்லாக மாறும், பொறுத்திருந்த கல் கோபுரம் செல்லும்' என்பார்களே, அதுதான் இந்த விடயத்தில் நடக்கிறது. நம் குழந்தைகளுக்கு நாம் என்ன கற்றுக் கொடுக்கிறோம்? 12-ஆம் வகுப்பு படித்தவுடன், அவசர அவசரமாக ஏதேனும் ஒருக் கல்லூரியில் பிஎஸ்ஸி, பிஇ போன்ற ஏதேனும் ஒருப் படிப்பில் சேர்த்துவிடுகிறோம். இலட்சக்கணக்கான ரூபாய் பணத்தைக் கொட்டிப...

நிலக்கடலை

நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம். நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம். நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும். நீரழிவு நோயை தடுக்கும்: நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். பித்தப் பை கல்லைக் கரைக்கும்: நிலக்கடலையை தினமும் 30 கிர...

30 விதிகள்

1. அடுத்தவர் பணத்தை முடிந்தவரை ரொட்டேட் பண்ணாதீர் ..(பண்ணவும் நினைக்காதீர்) 2. முடிந்தவரை  அடுத்தவரின் கார் மற்றும் டூ வீலர் கடன் கேக்காதீர் ... 3. கடன்வாங்கி சென்ற வாகனத்தில் முடிந்த வரை எரிபொருள் நிரப்பி கொடுங்கள் ... 4. பொதுவாக செலவு செய்யும் இடத்தில் முன்கூட்டியே சந்தேகம் இருந்தால் கேட்டு விடுங்கள் ..செலவு செய்தபின் tally சாப்ட்வேர் மாதிரி கேள்வி கேக்காதீர்கள் ... 5. பொது இடங்களில் நிற்கும் போது யாருடைய வழியையேனும் அடைத்துக் கொண்டு நிற்கிறீர்களா என்று உறுதி செய்து கொள்ளுங்கள் .... குறிப்பாக பொது இடம்,சிக்னல் 6. நண்பர்கள் / உறவினர்கள் வீடுகளுக்கு செல்லும்போது அவற்றின் அமைப்பைக் குறை சொல்லாதீர்கள். (பாத்ரூம் இங்கே இருந்திருக்கலாம்!) அமைப்பை மாற்ற யோசனை சொல்லாதீர்கள் ... (இந்த பிரிட்ஜை இங்கே வெச்சுக்கலாமே! - ( none of your business !). அவர்கள் படுக்கையறைக்கு செல்லாதீர்கள் ... அவர்கள் போனைக் கேட்காதீர்கள் ... அவர்கள் வைஃபை பாஸ்வேர்ட் கேட்காதீர்கள் ... 7. கடனைத் திருப்பிக் கேட்கும் முன்னர் அதற்கு ஒரு குறிப்பிட்ட குறைந்தபட்ச நாட்கள் காத்திருங்கள் ... 8. ஒருவர் கைபேசி அழைப்பை எடுக்கவ...

வயது என்பதற்கு எந்த வேலியுமில்லை..

Just numbers அவ்வளவுதான்... வாழ்க்கையில் எல்லோரும் ஒன்று தான்! 20 வயசுக்கு அப்புறம், வெளிநாடும், உள் நாடும் ஒண்ணு தான். எப்படி இருந்தாலும், எங்க இருந்தாலும், அட்ஜஸ்ட் பண்ண கத்துக்குவோம். 30 வயசுக்கு அப்புறம், இரவும், பகலும் ஒண்ணுதான்.கொஞ்ச நாள் தூங்கலன்னா கூட சமாளிச்சிட்டு போக கத்துக்குவோம். 40 வயசுக்கு அப்புறம், அதிகமா படிச்சிருந்தாலும்,குறைவா படிச்சிருந்தாலும் ஒண்ணு தான்.குறைவா படிச்சவங்க பெரும்பாலும் முதலாளியா இருப்பாங்க, அதிகமாவும் சம்பாதிப்பாங்க. 50 வயசுக்கு அப்புறம், அழகா இருந்தாலும், அசிங்கமா இருந்தாலும், வெள்ளையா இருந்தாலும், கருப்பா இருந்தாலும் ஒண்ணு தான்.எவ்வளவு அழகா இருந்தாலும், இந்த வயசில், முகத்தில் சுருக்கங்கள், கரும் புள்ளிகள் வந்துரும். 60 வயசுக்கு அப்புறம், மேலதிகாரி, கீழதிகாரி எல்லாரும் ஒண்ணுதான்.ரிட்டயர் ஆனப்புறம், எல்லார் நிலையும் ஒண்ணுதான். 70 வயசுக்கு அப்புறம், பெரிய வீடோ, குட்டி வீடோ எல்லாம் ஒண்ணுதான்.மூட்டு வலி, தள்ளாமை, நடக்க முடியா நிலை எல்லாமே வந்துரும். கொஞ்ச இடத்தில் மட்டுமே புழங்க முடியும். 80 வயசுக்கு அப்புறம், பணம் இருந்தாலும் பணம் இல்லன்னாலும் எல்லாமே ...

வாழ்க்கையை மகிழ்ச்சியாக்கும் மந்திரம்...

ஒரு ஊர்ல "கணவர்கள் விற்கப்படும்"  என புதிதாக கடை திறக்கப்பட்டது.. அந்த கடை வாசலில் விதிமுறை போர்டு இருந்தது... அதில் எழுதியிருந்தது... 1.கடைக்கு ஒரு தடவைதான் வரலாம்... 2. கடையில் மொத்தம் 6 தளங்கள் இருக்கிறது... ஒவ்வொரு தளத்திலும் இருக்குற ஆண்களோட தகுதிகள் மேல போக போக அதிகமாகிட்டே போகும்... 3.ஒரு தளத்துல இருந்து மேல போயிட்டா மறுபடி கீழ வர முடியாது... அப்படியே வெளியேதான் போக முடியும்... இதெல்லாம் படிச்சுட்டு ஒரு இளம்பெண் கணவர் வாங்க கடைக்கு வந்தார்... "பச்... கணவர் வாங்குறது என்ன காய்கறி வாங்குற மாதிரி கஷ்டமா என்ன... ச்சேச்சே அப்படி எல்லாம் இருக்காது" முதல் தளம் அறிக்கை பலகையில்... "இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள் வேலை உள்ளவர்கள்... கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்..." இது அடிப்படை தகுதின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போக முடிவு செய்றாங்க... இரண்டாம் தளம் அறிக்கை பலகையில்... "இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள் வேலை உள்ளவர்கள்... கடவுள் நம்பிக்கை உளளவர்கள்... மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்..." இதுவும் அடிப்படை தகுதி அப்படின்னு நினைச்சுட்டு இ...

புற்றுநோய் வைத்தியம்

நேற்று நண்பர் ஒருவரின் உறவினருக்கு புற்றுநோய் உள்ளது மருந்து வாங்க போக வேண்டும் என்றார். சரி என்று இருவரும் கேரளாவுக்கு கிளம்பினோம். கோவையில் இருந்து தடாகம் வழியில் சென்று ஆனைக்கட்டி சென்று அங்கிருந்து முக்காலி செல்ல வேண்டும்.. முக்காலியில் இருந்து நம் சிறியரக சடான் கார்கள் செல்ல முடியாது. ஜீப் வகைகள் வண்டியில் செல்வதே உத்தமம். மிக மோசமான வனதுறை சாலையில் போனால் இருக்கின்றது வள்ளியம்மாள் குருகுலம். பாதுகாக்கப்பட்ட வனபகுதியில் பிரம்மாண்ட கட்டிடங்களுடன் உள்ளது இந்த ஒற்றை மூலிகை வைத்தியசாலை. இது எப்படி சாத்தியம் அதுவும் கேரளத்தில் என்று சேட்டன்மார்களிடம் சம்சாரித்தால். பிரிட்டிஸ் அரசு வள்ளியம்மாள் என்கின்ற ஆதிகுடி இருளர் பெண்ணுக்கு  112ஏக்கரை பட்டயம் போட்டு தந்துள்ளார்கள். அரிய வகை மூலிகை வளர்க்க அன்று வந்த பிரிட்டிஸ் கவர்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சாகும் நிலையில் இருந்தவரை இருளர் பெண் வைத்திச்சிகள் சில கிழங்கு, மரபட்டை, வேர்களை பொடி செய்து கொடுக்க அவர் மீண்டு நீண்ட காலம் உயிர் வாழ்ந்திருக்கின்றார். அவர் பட்டயம்  செய்து கொடுத்த உரிமையில் இவர்கள் வாழ்ந்து பயன்படுத்தி வருகின்ற...

சுட்ட நாக்கு

குரு ஒருவருக்கு பேரழகியான ஒரு மகள் இருந்தாள், அதனால் அவளை திருமணம் முடிக்க பலர் போட்டி போட்டனர். அவர் தன் மகளை மனம் முடிக்க போட்டி போட்டவர்களிடம் " நான் இரண்டு கேள்விகள் கேட்பேன். அதற்கு சரியான பதில் சொல்பவருக்கே எனது மகள்" என்று சொன்னார். மறுநாள் போட்டியாளர்கள் அனைவரும் குரு வீட்டில் கூடி இருந்தனர். குரு அவர்களைப் பார்த்து " உலகிலே இனிமையான ஒரு பொருளை கொண்டு வாருங்கள்" என்று சொன்னார். மறுநாள் எல்லோரும் ஆளுக்கொரு பொருளை கொண்டு வந்தனர். ஒருவன் தேனைக் கொண்டுவந்தான். இன்னொருவன் கரும்பைக் கொண்டு வந்தான். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு இன்னிமையான பொருளைக் கொண்டு வந்திருந்தனர். வரிசையில் கடைசியாக குருவின் ஒரு ஏழை சிஷ்யனும் நின்டிருந்தான். குரு அவனைப் பார்த்து நீயுமா என்று ஆச்சரியமாக கேட்டார்.சீடன் நான் உங்கள் மகளைக் காதலிக்கிறேன் என்று சொன்னான். குரு நீ என்ன கொண்டு வந்திருக்கிறாய் என்று கேட்டார். சீடன் தான் கொண்டு வந்திருந்த சிறிய பெட்டியை திறந்து காட்டினான். அதனுள் ஒரு ஆட்டின் நாக்கு இருந்தது. குரு அதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். குரு 'என்ன இது எதற்காக இதை கொண்...

கூட்டு முயற்சிதான்

பல சமயங்களில் மக்கள் தங்கள் இலக்குகளை அடைவதில் மற்றவர்களின் பங்கு இருப்பதை மறந்து விடுகின்றனர். எல்லாம் தங்களால்தான் நடந்ததாக நினைக்கின்றனர்'. ஆனால் மற்றவர்களின் ஒரு பங்களிப்பு இல்லாமல் அந்த வேலை முடிந்து இருக்காது. ஒவ்வொருவருமே அவ்வேலைக்கு முக்கியம் என உணருவதில்லை. உண்மையில் தனியாக செய்யப் படும் வேலையை விட குழுவாக செய்யப்படும் வேலையே சிறப்பானது. ஏனெனில் கூட்டு முயற்சியின் பலன் அளப்பறியது குழுவிலில இருப்பவர்களுடன் வேலை செய்யும் போது நமக்கு சகிப்புத்தன்மை,   பல விதமான சூழ்நிலைகளை கையாள்வது போன்ற சிறப்பு பண்புகள் வந்து சேரும். கோடை காலத்தில் ஒருநாள் அச்சிறு நகரத்தின் மேயர் ஒரு சிறுவன் மிகப் பெரிய, மிகவும் அழகான காற்றாடி ஒன்றை பறக்க விடுவதைக் கண்டார். அவர் பார்த்ததிலேயே மிகவும் அழகான காற்றாடி அது, மிகவும் உயரத்தில், சீராக பறந்தது. அது பக்கத்து நகரத்தில் இருப்பவர்களுக்கு கூட தெரிந்திருக்கும் வகையில் உயரமாக பறந்தது. பெரும் சிறப்புகள் இல்லாத அச்சிறு நகரத்தில், அந்த அழகான காற்றாடிக்கு “நகரத்தின் சாவி” எனும் பட்டத்தை வழங்க விரும்பினார் மேயர். இந்த காற்றாடி பறந்ததற்கு யார் பொறுப்பு?” ...

பிரெய்ன் ஆன்டர்சன்

அமெரிக்காவில், ஒருநாள், ஒரு நெடுஞ்சாலை ஓரமாக, ஒரு Mercedes-Benz கார் நின்றுகொண்டிருந்தது. பழுதான அதன் சக்கரத்தை மாட்டமுடியாமல், ஒருபெண், தவிப்புடன், வழியில் செல்வோரிடம் உதவி கேட்டுக்கொண்டிருந்தார்.  எல்லாருமே வேகமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாகச்சென்ற ஒருவர், அந்தப்பெண்ணுக்கு உதவச்சென்றார். தன்னைப்பார்த்து அந்தப்பெண் பயப்படுவதை புரிந்துகொண்டார் அவர். அதனால், அவர், கனிவான குரலில், “நான் உங்களுக்கு உதவி பண்ணத்தாம்மா வந்திருக்கேன். ஏன் இந்தக்குளிர்ல வெளியே நிக்கறீங்க? கார் உள்ளே போய் உட்காருங்க. நான் நொடியில ஸ்டெப்னி மாட்டித்தரேன்”னு சொல்லி, கிடுகிடுன்னு வேலை செய்து அதை மாட்டிக்கொடுத்தார். அந்த மனிதரின் உடம்பெல்லாம் அழுக்கு. முழங்கையில் இலேசாக சிராய்ப்பு. “ஓகேம்மா! வேலை முடிஞ்சுது. இனிமே நீங்க கிளம்பலாம்”னார். “உங்களுக்கு எவ்வளவு பணம் தரவேண்டும்?”என, அந்தப் பெண் கேட்டார். எவ்வளவு கேட்டாலும், அந்தப் பெண் கொடுக்கத்தயாராகவே இருந்தார். ஆயினும், அந்த மனிதர், ஒரு புன்னகையோடு, “நான் மெக்கானிக் இல்லம்மா. இது என் தொழில் இல்லை. இது ஓர் உதவிதான்.  அதனால, எனக்கு எதுவும் வேண்டா...

கோயம்புத்தூர் வரலாறு

கோயம்புத்தூர் மாவட்டம் உருவான தினம்; இன்று வயது 216   November 24, 2019 09:30 AM பவானியை தலைமையிடமாக வடகொங்கு, தாராபுரத்தை தலைமையிடமாக தென்கொங்கு என இரண்டு மாவட்டங்களாக இருந்த கோவை ஒன்றுபட்ட கோவை மாவட்டமாக பிறந்து இன்றுடன் 214 ஆண்டுகள் நிறைவடைகின்றன. கி.பி 1804 நவம்பர் 24-ல் கோவை மாவட்டம் உதயமானது. அதையொட்டி, கடந்த பத்து ஆண்டுகளாக நவம்பர் 24-ம் தேதியை கோயமுத்தூர் தினமாக கோவை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். கோவை மாநகராட்சியும் ஆண்டுதோறும் கோயமுத்தூர் தினத்தில் புகைப்படக் கண்காட்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. சரித்திர முக்கியத்துவம் பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்பே சரித்திர முக்கியத்துவம் மிகுந்த நகரமாக திகழ்ந்துள்ளது கோவை. இதுகுறித்து பேசும் தொல்லியல் அறிஞர் பூங்குன்றன், “தற்போதைய தெக்கலூர் அருகே நடந்த அகழாய்வில் வண்ணத்தாங்கரை என்ற இடத்தில் கால்நடைகளின் செமி ஃபாசில்கள் கிடைத்துள்ளன. அவை மேற்கே உள்ள குருடிமலையில் 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தாளமடல் ஓடை, தன்னாசி பள்ளத்தில் கரைபுரண்ட காட்டாற்றில் அடித்துவரப்பட்ட மாடுகளாக இருக்கலாம் என்கிறார்கள். அப்போதே அங்கு கால்நடைகளை வளர்...

கணிதமேதை ராமானுஜம்

நட்பின்   இலக்கணம் கணிதமேதை ராமானுஜம் யாருடனும் மிக நெருக்கமாகப் பழகியதில்லை.  இதை அறிந்த ஒரு நபர் அவரிடம்  “உங்களால் ஏன் மற்றவர்களுடன் சகஜமாகப் பழக முடியவில்லை?” என்று கேட்டார். நான் அவ்வாறு பழகத்தான் விரும்புகிறேன், ஆனால், நான் எதிர்பார்க்கும் நபரைக் காண இயலவில்லை என ராமானுஜம் பதிலளித்தார் !!!. அவ்வாறென்றால் நீங்கள் எதிர்பார்க்கும் மனிதருக்கு என்ன தகுதிகள் தேவைபடுகின்றன? என அந்த நபர் கேட்டார் !!!. நட்புக்கு இலக்கணமான எண்கள்“220, 284" ஆகிய இரு எண்களைப் போல, நானும் என் நண்பரும் விளங்க ஆசைப்படுகிறேன்”என ராமானுஜம்  கூறினார்.  “நீங்கள் கூறிய எண்களுக்கும், என் கேள்விக்கும் என்ன தொடர்புள்ளது?” என்று குழம்பிய நிலையில் அந்த நபர் கேட்டார் !!!. குழம்பியவரைத் தெளிவுபடுத்த விரும்பிய ராமானுஜம் , 220, 284 ஆகிய இரு எண்களின் வகுத்திகளை (Divisors) முதலில் கண்டறியும்படிகூறினார் !!!. சிறிது சிரமப்பட்டு அந்த நபர் இவ்விரு எண்களின் வகுத்திகளைப் பட்டியலிட்டார் !!!. 220 → 1,2,4,5,10,11,20,22,44,55,110,220 284 →1,2,4,71,142,284 இந்தப் பட்டியலில் 220, 284 ஆகிய இரு எண்களை நீக்கி, இ...

Arnab Goswami is interviewing a farmer

Arnab : What do you feed your goats? Farmer : The white one or the black one? Arnab : The white one. Farmer : Grass. Arnab : And the black one? Farmer : That also grass. Arnab : Where do you tie up your goats? Farmer : The white one or the black one? Arnab : The white one. Farmer : Inside the barn. Arnab : And the black one? Farmer : That also inside the barn. Arnab : With what do you wash your goats? Farmer : The white one or the black one? Arnab : The white one. Farmer : With water. Arnab :  And the black one? Farmer : That also with water. Arnab Goswami gets angry and yells : Bloody fellow... If you do the same thing for both the goats why are you repeatedly asking me white or black ??? Farmer :  Because the white goat is mine. Arnab : And the black goat? Farmer : That is also mine. Arnab Goswami faints.... After he regains consciousness the farmer explains : Now you know how we feel when your TV channel shows the same news by twisting and turning it. Don't laugh alone and...

ABMRANE PP 12

Image

குற்றவியல் விசாரணை முனறச்சட்டம் பிரிவு 40

குற்றவியல் விசாரணை முனறச்சட்டம் பிரிவு 40  ஒரு குறிப்பிட்ட அறிக்கையை வழங்க ஒரு கிராமத்தின் விவகாரங்கள் தொடர்பாக பணியாற்றும்  அதிகாரிகளின் (கிராமநிர்வாக அலுவலர்) கடமை.- (1) ஒரு கிராமத்தின் விவகாரங்கள் மற்றும் ஒரு கிராமத்தில் வசிக்கும் ஒவ்வொரு நபரும் உடனடியாக அருகிலுள்ள மாஜிஸ்திரேட் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரியுடன் தொடர்பு கொள்ள வேண்டும், எது அருகில் இருந்தாலும், அவர் வைத்திருக்கும் எந்த தகவலும் respecting (அ)அத்தகைய கிராமத்தில் அல்லது அதற்கு அருகிலுள்ள எந்தவொரு மோசமான பெறுநரின் அல்லது திருடப்பட்ட சொத்தின் விற்பனையாளரின் நிரந்தர அல்லது தற்காலிக குடியிருப்பு; (ஆ) ஒரு குண்டர், கொள்ளைக்காரன், தப்பியோடிய குற்றவாளி அல்லது பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி என்று தனக்குத் தெரிந்த, அல்லது நியாயமான முறையில் சந்தேகிக்கிற எந்தவொரு நபரின் கிராமத்திற்கும் உள்ள எந்த இடத்திற்கும், அல்லது கடந்து செல்லும்; (இ) இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 143, பிரிவு 144, பிரிவு 145, பிரிவு 147, அல்லது பிரிவு 148 (45 இன்) 1860); (ஈ) எந்தவொரு திடீர் அல்லது இயற்கைக்கு மாறான மரணம் அ...

வ.உ.சிதம்பரனார் நினைவு நாள் 18 நவம்பர்

Image
இந்த நாளில் அன்று வ.உ.சி. இறந்த தினம்: 18-11-1936 வ.உ.சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம்பிள்ளை ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரர். வ.உ.சிதம்பரம்பிள்ளை தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் எனும் பன்முகத் தன்மை பெற்றிருந்தார். இவரது அரசியல் வாழ்க்கை உயர்ந்த ஒழுக்கமும், நேர்மையும், ஆற்றலும் நிறைந்ததாக இருந்தது. அவர் அன்பு, தைரியம், வெளிப்படையான குணம் இவற்றை உடையவராக இருந்தார். தமிழ் மொழியில் உள்ள அநேக இலக்கியங்களைப் படித்து அவற்றைப் பற்றி கட்டுரைகளையும், செய்யுள்களையும் எழுதியுள்ளார், ஆங்கில நூல்களை மொழிபெயர்த்துள்ளார். விடுதலைப் போராட்டம் குறித்தும் தமிழ் இலக்கியங்கள் குறித்தும் நண்பர்களுடன் விவாதிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வ.உ.சி. 1892- ஆம் ஆண்டு பால கங்காதர திலகர் அவர்களின் ஆற்றல் மிகுந்த, வீரம் செறிந்த எழுத்தால் கவரப்பட்டு திலகரின் சீடரானார். இவர்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டதோடு மற்றவர்களையும் பங்கு கொள்ளச் செய்தார். ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த...

நில அளவை

புதிதாக நிலம் வாங்குகிறீர்களா? அதன் பரப்பளவு, நாற்புற எல்லைகள் பற்றி அறிய வேண்டும் என்றாலும் அதன் புல வரைபடம் வேண்டு என்றாலும் அரசாங்க சர்வேயர் வந்து அளந்து ஸ்கெட்ச் போட வேண்டும். இந்த நில அளவை துறை தமிழக அரசின் ஒரு துறை. இது பற்றி சில தகவல்கள்: சர்வே பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 7 சங்கதிகள்: சர்வே இரண்டு பிரிவுகளாக மாநில அரசு பிரிக்கிறது. 1. நில அளவை துறை 2. நில வரிதிட்ட துறை புலப்படம், கிராம வரைபடம் எல்லாம் நில அளவை துறையினால் தயாரிக்கப்படுகிறது. “அ” பதிவேடு (A. Register) நில வரி திட்ட துறையினரால் உருவாக்கப்படுகிறது. மாநில அரசின் நில அள வைகளை நகர நில அளவை ,  நத்தம் நில அளவை, மலை கிராம நில அளவை, மறு நில அளவை, வட்ட அளவில் நாள்  தோறும் நடைபெறும் பட்டா மாறுதல் சம்மந்தமான நில அளவைகள் என  பிரிக்கப்படுகிறது. 1. கிராம வரைபடம், 2. D ஸ்கேட்ச் ( நன்செய், புன்செய், மானவளி, நத்தம், புறம்போக்கு பகுதிகளை பிரித்து காட்டும் வரைபடம்) 3. புலப்படம் 4.சர்வே கற்கள் பதிவேடு 5. டிப்போ பதிவேடு ( கிராமத்தில் இருக்கும் ஸ்டாக் வைக்கப்பட்ட கற்கள், நில அளவை சங்கிலி உட்பட உபகரணங்கள் இருக்கும் டிப...

Madras regimental centre, wellington

Image
The Madras regimental centre is located at Wllington, Coonoor, The Nilgiris, Tamilnadu. It is one of the oldest regiments of Indian Army trained thousand of warriors. There is museum in Madras Regimental centre displaying oldest armour, weapons and other things used in Indian Military. Public are allowed to visit this museum. So if you happen to visit Coonoor dont forget to visit the Museum. புகழ்பெற்ற "மெட்ராஸ் ரெஜிமென்டல் சென்டர்" எனும் இந்திய ராணுவத்தின் படைப்பிரிவின் பயிற்சி மையம் வெலிங்டன் பேரக்சில் அமைந்துள்ளது. இங்கு "ராணுவ அருங்காட்சியகம்" அமைந்துள்ளது. இதில் ராணுவத்தின் செயல்பாடுகள் மற்றும் பழங்காலம் முதல் தற்போது வரையுள்ள போர்க்ருவிகள், உடைகளை காட்சிப்படுத்தியுள்ளார்கள். குழந்தைகள் முதல் அனைவரும் விரும்பும் வகையில் உள்ளது. தரமாக பராமரிக்கிறார்கள். நுழைவுக்கட்டணம் ரூ20.   50க்கும் அதிகமானோர் குழுவாக சென்றால் கட்டணச் சலுகை உண்டு.

நிறைவான வீடு - ஒரு சீனக் கதை

நிறைவான_வீடு ஒரு காகிதத்தில் கொஞ்சம் காற்றை அடைத்துக் கொண்டு வரவேண்டும். சீனாவில் ஒரு பெரியவர் இருந்தார். அவருக்கு மூன்று மகன்கள். முதல் இரண்டு மகன்களுக்கும் திருமணம் ஆகியிருந்தது. எப்போதும் வீடு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், மருமகள்கள் தங்கள் தாய்வீட்டுக்குச் சென்றால், விரைவில் திரும்பி வர மாட்டார்கள். அன்றும் மருமகள்கள் தாய்வீடு செல்ல அனுமதி கேட்டனர்.  பெரியவர், “போய் வாருங்கள். வரும்போது நீங்கள் எனக்கு இரண்டு பொருட்களைக் கொண்டுவர வேண்டும். கொண்டு வராவிட்டால், மீண்டும் உங்கள் அம்மா வீடு செல்ல அனுமதிக்க மாட்டேன்” என்றார். சரிங்க மாமா. என்ன வேணும், சொல்லுங்கள்?” என்றனர் இரு மருமகள்களும். ஒரு காகிதத்தில் கொஞ்சம் காற்றை அடைத்துக் கொண்டு வரவேண்டும்” என்று ஒரு மருமகளிடமும், “காகிதத்தில் கொஞ்சம் தீயை கட்டிக் கொண்டுவர வேண்டும்” என்று இன்னொரு மருமகளிடமும் சொன்னார் பெரியவர். இதைக் கேட்டு மருமகள்கள் இருவரும் திகைத்தனர். சரி பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று கிளம்பிவிட்டனர். தாய் வீட்டில் சந்தோஷமாகச் சில நாட்கள் இருந்தார்கள். வீடு திரும்ப வேண்டிய நாள் வந்ததும்தான் மாமனார் கேட்ட விஷயம் பற்றிய ...