The Lancet, Palio diet
மருத்துவ உலகை புரட்டிப் போட்ட ஒரு ஆராய்ச்சி
Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbatore
நேற்று(29.8.17) ஒரு முக்கிய தினம். உலகில் பல பகுதிகளில் பல செய்தித்தாள்களில் இந்த நியூஸ் இடம் பெற்றுள்ளது.
"PURE என்ற ஒரு ஆராய்ச்சி, உணவியல் மற்றும் மருத்துவத் துறையை உலுக்கி விட்டது: அதிக கொழுப்பு சாப்பிடுதல் நல்லது"
இந்தியா உட்பட 18 நாடுகளில் , ஏழு வருடங்களாக 1,35,000 பேரிடம் செய்த மிகப் பெரும் ஆராய்ச்சி இதுவாகும்.
இதில் கண்டுபிடிக்கப் பட்டது:
1.
கொழுப்பு ஆபத்தில்லை: நெய், தேங்காய் எண்ணெய், முட்டை, இறைச்சி, சீஸ்
போன்ற saturated கொழுப்புகள் எந்த வகையிலும் உடல் நலத்திற்கும் இதய
நலத்திற்கும் தீங்கானது அல்ல
2.
அதிக மாவுச்சத்து உண்பவர்களுக்கு தான் அதிகளவில் இறப்பு வருகிறது
(உதாரணம்:இட்லி, தோசை, சாதம், சப்பாத்தி, சர்க்கரை). கம்மி மாவுச்சத்து
எடுப்பவர்களை விட இவர்கள் 28% அதிகம் இறக்கிறார்கள்.
3.
அதிக saturated கொழுப்பு சாப்பிடுபவர்களுக்கு இறப்பு எண்ணிக்கை குறைவு.
கம்மி கொழுப்பு சாப்பிடுபவர்களுக்கு இறப்பு எண்ணிக்கை அதிகம்.
4. அதிக saturated கொழுப்பு சாப்பிடுபவர்களுக்கு ஸ்டிரோக் எனப்படும் மூளையில் ரத்த அடைப்பு வருதல் கம்மியாகிறது.
5.
கம்மி மாவுச்சத்து, அதிக கொழுப்பு சத்து எடுப்பவர்களுக்கு Apo B,
Triglyceride எனும் கெட்ட கொழுப்புகள் கம்மியாகவும்; HDL & Apo A1
எனப்படும் நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்கவும் செய்கிறது.
மாவுச்சத்து எடுத்தால் உடலுக்கு தீங்கு. கொழுப்பு (பேலியோ டயட்) எடுத்தால் உடலுக்கு நல்லது.
இது
ஏதோ ஒரு டப்பா ஜர்னலில் வந்தது இல்லை. The Lancet ல் வந்தது.
200வருடங்களுக்கு முன்னால் இது ஆரம்பிக்கப் பட்டது. உலகின் முதல்
மெடிக்கல் ஜர்னலும் இதுவே.
பேலியோ
எடுத்தால் நல்லதா என்று கேட்ட காலம் போய், பேலியோ எடுத்தால் மட்டுமே அதிக
காலம் ஆரோக்கியமாக உயிர் வாழலாம் என்பதே இந்த ஆராய்ச்சி நமக்கு சொல்கிறது.
Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbatore
Comments
Post a Comment