பெண்கள் தினம் மார்ச், 8 ஆம் நாள்
இன்று மார்ச், 8 ஆம் நாள் சர்வதேச பெண்கள் தினம். எங்கள் அலுவலகத்தில் இது குறித்து ஒரு சிறு நிகழ்ச்சி. மாலை 6.00 மணிக்கு அனைவரும் அசெம்பிள் ஆகி கேக் வெட்டி தேனீர் வழங்கினார்கள். இந்த தினத்தின் சிறப்பு குறித்து சிலர் பேசினார்கள். என்னையும் பேச அழைத்தார்கள். ஆனால் அப்போது இருந்த மனநிலையில் என்னால் பேச இயலவில்லை. ஆனால் இரவில் உறங்க செல்லும் முன்பு நான் பேசியிருந்தால் என்ன சொல்லியிருப்பேன் என்பது, "மங்கையராக பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா பங்கையற் கைநலம் பார்த்தலன்றி பாரினில் அறங்கள் வளரும் அம்மா" இது பெண்கள் குறித்து கவிமணியின் பாடல். பாரினில் அறங்கள் வளர வேண்டுமெனில் அது பெண்களால் தான் முடியும். சிந்தித்து பார்க்கும்போது அறம் என்ற வார்த்தை தமிழின் கொடையாகும். அதற்கு நிகரான ஆங்கில சொல்லையோ பிற மொழி சொல்லையோ பார்த்தல் அரிது. அறம் என்றால் என்ன? நல்ல செயல்கள் எல்லம் அறமாகும். "அறம் செய்ய விரும்பு" என்றாள் அவ்வை ஆத்திசூடியில். இப்படி குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் நல்ல செயல்களையே செய்யும் பெண்கள் ஒரு காலத்தில் அடக்கி ஒடுக்கப்பட்டு இழி நிலையில் இருந்தார்கள்...