குழந்தை வளர்ப்பு மனோவியல்

பெற்றோர் குழந்தை உறவு எப்படி இருக்க வேண்டும்? நம்மில் நிறைய பெற்றோர் குழந்தைகளுக்கு தேவையான உணவு, உடை, நல்ல பள்ளிக்கூடம்னு பாத்து பாத்து பன்னுவாங்க. ஆனா அதுக்கும் மேல குழந்தை வளர்ப்புல சில (psychological aspects) மனோரீதியான அணுகுமுறைகள் இருக்கு. குழந்தைகள் தங்களோட தேவைகளை எப்படி வெளிப்படுத்துறாங்கன்னு இந்த படங்கள் விளக்கும். குழந்தைகள் முரட்டுதனமா நடந்துகிட்டாங்கன்னா அதுக்கு காரணம் பெற்றோர்தான். அப்பா, அம்மாகிட்ட இருந்துதான் அத கத்துக்கறாங்க. நீங்க உங்க குழந்தைக்கு தேவையானத வாங்கி குடுத்த பின்னாடியும் அவன் அடுத்தவங்க பொருளை எடுக்கறான்னா அவனுக்கு வேண்டித தேர்ந்தெடுக்க நீங்க அனுமதிக்கறதில்லன்னு அர்த்தம். உங்க பையன்/பொண்ணு பொய் சொல்றாங்கன்னா காரணம் சின்ன சின்ன தப்புகளுகும் நீங்க ஓவர் ரியாக்ட் செஞ்சுட்டீங்கன்னு அர்த்தம். உங்க பையன்/பொண்ணு கோழையா இருக்காங்கன்னா அத்க்கு காரணம் சின்ன வேலையா கூட தனியா செய்ய விடாம நீங்க உதவி செய்றீங்க. அது தப்பு. let him/her try உங்க குழந்தைக்கு சீக்கிரம் கோபம் வருதா? சின்ன விசயங்களுக்கும் அவங்கள பாராட்டுங்க, புகழுங்க . அவங்கள...